Sunday, October 30, 2016

‘அரசியலை நான் தொழிலாகப் பார்ப்பதில்லை!’ - இந்திரா காந்தி நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘னக்கு நல்லது செய்தவர்களைவிட, தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், என்னிடம் அவர்கள் திரும்ப வரும்போது யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர்கள் மேல் கசப்புணர்வு தோன்றாமல் இருப்பதும்’’ என்றவர் அன்னை இந்திரா காந்தி. அவருடைய நினைவு தினம் இன்று.
இந்திராவின் சிறுவயது நாட்கள்!
கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் நகரம்; அங்கு, ‘ஆனந்த பவனம்’ என்னும் அழகு மாளிகை. அரண்மனைக்கு ஒப்பான அந்த மாளிகையில் ஒரு இளவரசரை விடவும் மேன்மையாக வளர்க்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கும் காஷ்மீர் ரோஜாவுக்கு ஒப்பான கமலாவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்ஷினி.
தங்கத் தொட்டில்; வெள்ளித் தட்டு; அலங்கார நடைவண்டி; 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... இவையனைத்தும் அரண்மனை போன்ற அந்த மாளிகையில் நிரம்பி இருந்தன. இருந்தும் என்ன பயன்? சிறுமி இந்திராவின் உறவுகள் எல்லாம் சிறைச்சாலைகளிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் அல்லவா குழுமியிருந்தன. சிறைவாசம் முடிந்து வரும் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் சில காலம் விளையாடுவார் சிறுமி இந்திரா. பிறகு, மீண்டும் கைதாகிச் சிறைக்குச் சென்றுவிடுவார் தாத்தா. அப்பா ஒரு சிறையில்; அன்னையும், பாட்டியும் அந்நிய நாட்டுத் துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தும் கண்டன ஊர்வலத்தில். இப்படித்தான் நகர்ந்தன சிறுமி இந்திராவின் சிறுவயது நாட்கள்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/70921-indira-gandhi-memorial-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment