Wednesday, October 5, 2016

சுவாதி - ராம்குமார்... கேள்விகள் ஆயிரம்... உண்மை என்ன?!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.40 மணிக்கு, சுவாதி வெட்டிச் சிதைக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலம், தமிழகத்தை அதிரவைத்தது; அந்தக் காட்சிகள் எழுப்பிய ஓலக்குரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. அன்று தொடங்கி, அடுத்துவந்த 4 நாட்களுக்கு, தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்விகளாக இருந்தவை, கொலையாளி யார்... கொலையாளி எங்கே... எதற்காக இந்தப் படுகொலை என்பவைதான். ஒவ்வொரு நாளும் கேள்விகளின் அழுத்தம் தமிழகத்தை இறுக்கிக் கொண்டிருந்தபோது, நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராம்குமாரை அடையாளம் காட்டியது போலீஸ். கைதுசெய்யப்போன அந்த நேரத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட ராம்குமார் தொடங்கி, ராயப்பேட்டை மருத்துவமனையில் சடலமாகக் கிடந்ததுவரை ராம்குமாரை ஆயிரம் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்திருந்தன.
மேலும் இந்தக் கட்டுரயைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/coverstory/68575-from-swathi-murder-to-ramkumar-mysterious-death.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment