Friday, July 15, 2016

முயற்சி

தூங்கும் தோள்களைத்
தட்டி எழுப்பு...
தொடுவானம் உன்
கையில் இருக்கு!

விதை

ஆலமரத்திடம் போய்
ஒருவன்,
'உனக்குப் பலம் சேர்ப்பது
வேரா... விழுதா?' என்றான்...
'இரண்டும் அல்ல...
விளை(தை)நிலம் மட்டுமே' 
என்றது மரம்!

நவீனம்

'வேறொரு 
சாதிக்காரர் அமர்ந்த
திண்ணையை 
ஜலம் கொண்டு அலசு'
என்ற தாத்தாவிடம்
வாயைக் கழுவச்சொல்லி
தண்ணீர் கொடுத்தாள்...
பேத்தி!

முரண்

தொட்டால் தீட்டு என்று
வசைபாடும் பெரியவரின்
வாரிசைத் தொட்டுத்
தூக்கிக்கொண்டு வந்தாள்
சாதி எதுவென்று தெரியாத
நர்ஸ்!

ஈழத்தமிழன்

முள்வேலிக்குள்
முடங்கிக்கிடக்க 
வேண்டியவனா  - நீ?
இல்லை...
முள்ளிவாய்க்காலை
கைப்பற்ற வேண்டியன்!

ஹைக்கூ

மார்ஃபிங் செய்த புகைப்படம்...
மானத்தில் உயிரைவிட்டாள்
தமிழச்சி!

தயக்கம்

எங்கும்
செல்போன் கோபுரங்கள்...
வரத் தயங்குகின்றன
பறவைகள்!

சுதந்திரம்

என்றைக்கு ஒரு பெண்
இரவில்
தனியாகப் பயமின்றி
நடந்துசெல்கிறாளோ
அன்றுதான்
இந்தியாவுக்குச் சுதந்திரம்...
இல்லை,
முதலில்
பகலில் நடந்துபோகட்டும்!

முயலாமை

முயல் 
வேகமாய் வெல்லும்...
ஆமை
மெதுவாய் வெல்லும்...
ஆனால்,
முயலாமை
ஒருநாளும் வெல்லாது!

Friday, July 8, 2016

சித்தர்கள் சொல்லும் உடற்பயிற்சி!

உடற்பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை எவை?

யிற்சியை காலை, மாலை வேளைகளில் செய்யவேண்டும். முதலில் பயிற்சியைத் தொடங்குபவர்கள் குறைவான நேரம் செய்யவேண்டும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம். துணையுடன் செய்தால் ஆர்வம் அதிகரிக்கும். தனியாகப் பயிற்சி செய்யும்போது இசையைக் கேட்டுக்கொண்டு செய்யலாம். உடலை வருத்திக்கொள்ளாமல் பயிற்சி செய்வது முக்கியம். விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோர் மைதானத்தைப் பயன்படுத்துவது மிகச் சிறந்தது. உங்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் உங்கள் நண்பர் உங்களைவிட அதிக அளவில் பயிற்சியில் ஈடுபடுபவராக இருத்தல் வேண்டும். உடற்பயிற்சியைத் தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உடலுக்கு நல்லது அல்ல. உடற்பயிற்சிக்குக் 60 சதவிகிதம் டய்ட்டும், 40 சதவிகிதம் பயிற்சியும் தேவை. எத்தகைய பயிற்சி செய்தாலும் டயட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அவரவர் உடல் ஆரோக்கியத்தைத் தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று உடற்பயிற்சி செய்யவேண்டும். எந்தவிதமான உடற்பயிற்சி செய்தாலும் அதனை தொடர்ந்து செய்யவேண்டும். எந்தப் பயிற்சி செய்வதற்கு முன்பும் வார்ம் அப் செய்வதை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்குக் குறைவானவர்கள் பாடி பில்டிங், பவர் பில்டிங் செய்தால், அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும். பவர் லிஃப்ட்டிங், வெயிட் லிஃப்ட்டிங் செய்வதற்கு முன் மைதான பயிற்சிகளைச் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவிகள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி முடியும் வரை இடையிடையே ஓய்வெடுக்கக் கூடாது. பயிற்சியில் ஈடுபடுபவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயிற்சி முடிந்தபின் மூக்கால் மட்டுமே சுவாசிக்க வேண்டும். பயிற்சி முடிந்தபின் அரைமணி நேரம் இடைவேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

சுகப்பிரசவம் குறைவது ஏன்? - ஓர் அலசல்!

காதல்

இரண்டு உயிரோட்டமான உள்ளங்களில் ஏற்படும் ஓர் உணர்வே காதல். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடலில் நடைபெறும் ரசாயன மாற்றமே காதல். அந்த மாற்றமானது மூளைக்கு புத்துணர்ச்சியும், ஊக்கமும் தருகிறது என்று காதலைப்பற்றி விவரிக்கிறது விஞ்ஞானம். உடல்ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆன்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களே காதல் என்று வரையறுக்கின்றனர் அறிஞர்கள். அன்பு, நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் ஆகியவை சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலுக்கு அடையாளங்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து காதலைப் பற்றிய பல கருத்துக்கள் பேசப்படுவதுண்டு. உண்மையான காதல் என்பது உள்ளுணர்வோடு பழகினால்தான் அதை உணரமுடியும். 

Monday, July 4, 2016

சுருட்டல்

உயிரிழந்தவர் குடும்பத்துக்கு
நிவாரணம் 
ஒரு லட்சம் ரூபாய்!
ஆனால் 
போய்ச் சேர்ந்தது
என்னவோ
ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே!