Friday, January 22, 2016

எலேய் தம்பி...

எலேய் தம்பி...
ஏட்டுக்கல்வி மட்டும் போதாதுடா...
கூடவே கைத்தொழிலும் வேணுமடா!
செய்யும் தொழிலே தெய்வமடா...
அதைச் சிறப்பாச் செஞ்சா செல்வமடா!

சோம்பலை உதறித் தள்ளடா...
சூரியனாய் எழுந்து நில்லடா!
கவலையை மறந்திடுடா...
கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளடா!

நாட்டுல எத்தனையோ தொழிலிருக்கு...
நல்லவிதமா கத்துக்கிட்டா பயனிருக்கு!
காட்டு மேட்டுல பொருளிருக்கு - நீ
கஷ்டப்பட்டா 



விவசாயத்தில் பெருமை காண்போம்!

விவசாயத்தைத் தூக்கி நிறுத்துவோம்...
விதண்டவாதத்தை ஒழித்துக்கட்டுவோம்...
விளைநிலங்களைச் செம்மையாக்குவோம்...
வெளிநாடுகளில் கையேந்துவதைத் தவிர்ப்போம்!

விளைச்சலைப் பெருக்க வழிவகுப்போம்...
விவசாயிகளிடம் கலந்துரையாடுவோம்...
வீணாய்ப் போகும் நீரைப் பாதுகாப்போம்...
வீரியமிக்க விதைகளைப் பயன்படுத்துவோம்!

ஆறு, ஏரி, கால்வாய்களைத் தூர்வாருவோம்...
அதன் மீதிருக்கும் குடிசைகளை அகற்றுவோம்...
அனைத்தையும் முறையாகப் பயிரிடுவோம்...
அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைப்போம்!

அனைவரும் ஒன்றுகூடி உழைப்போம்...
அரசாங்கத்திடம் கடனுதவி பெறுவோம்...
ஆதாயம் பெற்று வாழ்வில் மகிழ்வோம்...
அதீத வளர்ச்சியால் பெருமை காண்போம்!

Wednesday, January 20, 2016

'இனம்'!

ஆணினம் பெண்ணினம்...
அகிலத்துக்குத் தெரிந்தது
இந்த இரண்டு 'இனம்'!

ஓரினம் ஈரினம்
ஒன்றுபட்ட உயிரினம்...
உள்ளத்தைக் கவரும்
பூவினம்!

சிறகு விரிக்கும்
பறவையினம்...
சினம்கொள்ளும்
விலங்கினம்!

இவை அனைத்தும்
பார்ப்பதில்லை 'இனம்'!
சிந்தையுள்ள 
மனித இனம் மட்டும்
பார்க்கிறது 'இனம்'!

தினம் ஒரு கீரை!

தினம் ஒரு கீரையாம்...
தின்றால் உடல் திடமாகுமாம்!
திசை எங்கும் கிடைக்குமாம்...
தேன்போல இனிக்குமாம்!

தின்னத்தின்ன ஆசையாம்...
திகட்டாமல் இருக்குமாம்!
குழந்தைகூட உண்ணுமாம்...
குடற்புண்ணை விரட்டுமாம்!

கண்ணைப் பாதுகாக்குமாம்...
கை, கால் வலியைப் போக்குமாம்!
முடி உதிர்வதைத் தடுக்குமாம்...
மூலத்தையும் நீக்குமாம்!

சத்து பல நிறைந்ததாம்...
சக்தி அதிகம் கொடுக்குமாம்!
தினம் ஒரு கீரையாம்...
தின்றால் உடல் திடமாகுமாம்!

Tuesday, January 19, 2016

எல்லாத்துக்கும் இங்கே உணவிருக்கு!

ஃபாஸ்ட் ஃபுட் நமக்கு எதற்கு?
ஃபர்ஸ்ட் கிளாஸ் உணவு இங்கிருக்கு...
புரோட்டாவையும் நூடுல்ஸையும் ஓரங்கட்டு...
புரோட்டினையும், வைட்டமினையும் உணவில் காட்டு!

பீட்சா, பர்கரும் உணவுக்குக் கேடு...
பெஸ்ட்டான சிறுதானியத்தைக் கையிலெடு...
ஃப்ரெஸ்ஸா காய், கனி சாப்பிடு...
பிரஸர், சுகர்கூட தூர ஓடிடும் பாரு!

கூல்டிரிங்ஸில்கூட கெமிக்கல் இருக்கு...
நம்ம ஊரு கூழபோல வேற என்ன இருக்கு?
கூலிங்காய் இளநீரும், மோரும் இருக்கு
அத குடிக்கலைனா நோய் அதிகமிருக்கு!

கண்டகண்ட உணவையெல்லாம் சாப்பிட்டு
காசு பிடுங்கும் டாக்டரிடம் நிக்கணுமா?
கட்டுப்பாடோடு நாம் இருந்தா
எல்லா நோயையும் விரட்டலாமே?

ஃப்ரியா மோசன் போகலையா?
பீரியடு சரியா வரலையா?
உடல் எடையைக் குறைக்கணுமா?
உள்ளத்தைத் தூய்மையாக்கணுமா?

எல்லாத்துக்கும் இங்கே உணவிருக்கு...
எடுத்துத் தின்றால் பலனிருக்கு!