Sunday, July 12, 2009

இவ்வுலகத்து தேவதையே.....

நீயும் நானும்
நிலாச்சாரலில்
கைகோர்த்து நடக்கையில்
மின்மினிகளும் மலர்தூவ
மெல்லிய மலர்களும்
வாழ்த்துப்பாட,
நடந்தோமே புல்வெளியில்.....
நனைந்தோமே பனிச்சாரலில்!

அழகிய பூங்காவுக்குள்
அருகருகே
அமர்ந்துபேசி
மகிழ்ந்தோமே.....
அசையாத
நம்நினைவுகளை
அதிலும் குறிப்பாய்
நீ - நடத்திய
நாடகங்கள்
எத்தனை எத்தனையோ?
அதில்
எதை சொல்வது?
எதையும் அவ்வளவு
எளிதில்
மறக்க முடியாது......
என்னால்!


ஆனாலும்
என்னை மிகவும்
ஆச்சரியப்படுத்திய
நினைவுகளை மட்டும்
இப்போது சொல்கிறேன்.....
உன்னை
முதலில்பார்த்தபோது
மூச்சுக்கூட விடமுடியாமல்
பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்தாயே......

என் காதலை
உன்னிடம்
சொல்லவந்தபோது
காலணியை காட்டினாயே.....
கவலையுடன் நான்
காத்திருந்த நேரத்தில்
உனக்குள்ளும்
காதல்இருப்பதை
கண்களால்
காட்டிச் சென்றாயே......


உன் புன்னகை
முகத்தை வைத்து
புதுக்கவிதை எழுதச்சொல்லி
அடம்பிடித்தாயே....
இந்தச்
சின்ன இதயம்
ஆசைப்பட்டதற்காக
சேலைகட்டி வந்து
அசத்தினாயே.....

ஒழுகும் ஐஸ்கிரீமை
உதட்டில் வழியவிட்டு
என் ஒருவிரலால்
துடைத்துவிடசொன்னாயே......

குடை எடுத்து
செல்லாதநாளில்
மழையில் நனைந்து
மருத்துவமனைக்கு
செலவு வைத்தாயே......

சின்ன தியேட்டருக்குள்
சிரிப்பு படம்
பார்க்கும்போது
உனக்கு
வயிற்றுவலிவந்து
பாதியிலேயே
திரும்பினோமே.......

நம் காதலை
உன் நண்பிகளிடம் சொல்லி
சந்தோஷத்தில்
மிதந்தாயே.....
என் அழகிய
புகைப்படத்தை
எடுத்துச்சென்று
உன் வீட்டு
அலமாரியில்
வைத்து
ரசித்து பார்த்தாயே.....

கடற்கரையில்
நம் பெயரை எழுதி
ஆனந்தப்பட்ட - நீ
அடுத்த நிமிடமே
அலை வந்து
அழித்துச் சென்றதால்
அழுதாயே.....

சண்டை
போட்டுக்கொண்டு
உன்னிடம்
நான்பேசாமல்
இருந்ததற்காக
சாப்பிடாமல் கிடந்து
மயக்கம்
போட்டுவிழுந்தாயே......


இவ்வுலகத்து தேவதையே......
இது மட்டும் போதுமா?
இல்லை,
இன்னும் சொல்லவா?
என்னால்
எதையும்மறக்க முடியாது.....
என் இதயத்தில்
உன்னை தவிர
வேறு யாரையும்
சுமக்க முடியாது......
இது
இப்போதுமட்டுமல்ல.....
எப்போதைக்கும்!

Thursday, July 9, 2009

அதிசயமான அழகு

ஆயிரம் மலர்களில்
எந்த மலர் அழகு?
சொல்லத்தெரியாது
எனக்கு....
ஆனால்
ஆயிரம் மங்கைகளில்
நீ - மட்டும் தான் அழகு.....

ஓரப்பார்வை அழகு
ஒற்றை சடை அழகு
சின்ன பொட்டழகு
சிரிக்கும் முகம் அழகு....

முத்து பற்கள் அழகு.....
முல்லைப் பூ
விரல்கள் அழகு.....


முந்த்ரிப்பழமாய் முன்னழகு
மத்தளமாய் பின்னழகு
மொத்தத்தில் குறைஇல்லாத
உடல் அழகு.....
குழந்தையை கொஞ்சும்
குறும்பு அழகு.....
குடத்தை சுமக்கும்
இடை அழகு.....

வளையல் கொண்ட
கரம் அழகு.....
வாசிக்கின்ற
இதழ் அழகு.....
மௌனத்துடன்
மண்பார்த்து நடக்கும்
நடை அழகு.....
மழைஇல் நனைந்து
மகிழ்ச்சியில் போடும்
ஆட்டம் அழகு....

பளபளக்கும் பாதம் அழகு.....
பாவாடை தாவணியில்
பருவம் அழகு....
பப்பாளியாய் நிறம் அழகு....
பத்தரமாற்று தங்கம் என்ற
பெயர் அழகு......
விடியற்காலையில்
எழுவது அழகு....
வெகுளித்தனமாய் இருக்கும்
தன்மை அழகு.....

பக்குவமாய்
சமைப்பது அழகு....
பய பக்தி உடன் கோவிலுக்கு
செல்வது அழகு....
என்னைப்பற்றி தினம்
நினைப்பது அழகு....
எதற்கும் உன்
சாந்தமே அழகு.....

நீ - மட்டும்
விசித்திர அழகு.....
நீயும், நானும்
இணைந்தால்
அது நிரந்தர அழகு....

அதிசயமான அழகை
உன்னிடம் மட்டும்
காண்கின்றேன்.....
அதை படைத்த
பிரம்மனுக்கு
தினம்
நன்றி கூறுகின்றேன்.....

ஆளுக்கொரு
அழகு பிடிக்கும்.....
ஆனால்
எனக்கு உன்
அழகு மட்டுமே
பிடிக்கும்.....

Thursday, July 2, 2009

ஹைக்கூ

இளமைகள் சாப்பிடும்
இனிய விருந்து...
முதல் இரவு.....

Wednesday, July 1, 2009

ஹைக்கூ

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
கருவிலும் சாவு
பெண் சிசு.....

Monday, June 29, 2009

வானொலி




என் நெஞ்சத்தில்
உரசுகின்றாள்.....
பேட்டரியாய்!
ஆனால் - நானோ
வானொலியாய்
காதல் வார்த்தைகளை
ஒலிபரப்புகின்றேன்....
அவளோ
காதில் வாங்குவது 
கிடையாது!

Thursday, June 25, 2009

உலகம்

மனிதன் இருக்கும்வரை
வேசம்போடும் உலகம்
இறந்தபின்பு
நாடகத்தையே
கலைத்துவிடும்......

வாழ்க்கை

நீரின்றி அமையாது
உலகு.....
அவளின்றி சிறக்காது
என் வாழ்வு......

Sunday, June 21, 2009

நறுக்

கண்ணே.......
உன்னை கைபிடித்தால்
அக்னி சாட்சி......
கைவிட்டால்
கருவே சாட்சி.........

நறுக்

என்னவள்
நேற்று அழகி....
இன்று பேரழகி......
நாளை கிழவி.......

நறுக்

வாழ்க்கையே ஒரு போர்க்களம்......
அதில் வாழ்ந்தவர் ஏராளம்.....
நீயும் வாழு பேர் சொல்லலாம்.......

நறுக்

கடலோடு இந்தியா
வரலாறு சொல்கின்றது.....
கடனோடு இந்தியா
வங்கி சொல்கின்றது.....

நறுக்

நேற்று முதல்
நீ தான்......
இதில் மாற்றம்
ஏற்பட்டால்
சந்தேகம் இல்லை....
அது உன்
தங்கை தான்.....

Saturday, June 20, 2009

ஹைக்கூ

முதலில் நீ....
பின்பு வீடு....
பிறகு நாடு...

Sunday, June 14, 2009

ஏக்கம்

காற்றில் ஆடுது
அவள்
காயப்போட்ட தாவணி.....
காயத்தில் வாடுது
அவளை காதலித்த
இந்த மனசு......

Thursday, June 11, 2009

பார்வை

அவள் என்னை நோக்க
நான் அவளை நோக்க
எங்கள் இருவரையும்
நோக்கியது...
எதிர்வீட்டு நாய்.....

Tuesday, June 9, 2009

முரண்

தாவணியை தவிர்க்கும்
தளிர்களே...
கொஞ்சம் துப்பட்டாவை
தோளில் போடுங்களேன்...

கவலை

அவள் வகுப்புக்கு
வந்தால் சந்தோசம்...
வரவில்லையேல்
எனக்கு ஜலதோஷம்...

Sunday, June 7, 2009

காத்திருப்பு

வானம் ஏற்றிவைத்த
நிலா வெளிச்சத்துல
தெருவிளக்கும்
சேர்ந்து போட்டிபோட
வாசல் முற்றத்தில்
காதுகுடையும் தாத்தாவோடும்
கண்டிக்கும் பாட்டியோடும்
கதைபேசி மகிழும் அம்மாவோடும்
கண்ணாமூச்சி விளையாடும்
அக்காவோடும்
காத்திருக்கிறேன் நான்....
வேலைமுடிந்து வேர்க்கடலை
வாங்கிவரும் அப்பாவுக்காக....

நினைப்பு

கண் மூடி தூங்கினேன்
கனா வரவில்லை....
கன்னி அவளை நினைத்தேன்
உறக்கமே வரவில்லை.....

ஜாதி

அன்பே ......
நீ பாதி
நான் பாதி.....
இடையில் நமக்கேன்
ஜாதி?

பாதுகாப்பு

கண் இமைக்காமல்
பார்த்துகொள்வேன்.....
கவலைபடாதே கண்மணியே
உன்வீட்டு சொத்துகளை......

ஹைக்கூ

பூக்களை கிள்ளினேன்

வாசம் வந்தது....

பூவையவளை கிள்ளினேன்

போலீஸ் வந்தது.....

நிலவு

எனக்கும்

நிலவை பிடிக்கும்.....

நீ -

நிலவு என்பதால்....

காதலி

வாழ்விலும் சாவிலும்
என்னோடு இருப்பேன் என்று
சத்யம் செய்தவள்
இன்று
வார்த்தை தவறி விட்டாள்.....
வசதியான என் நண்பன்
கிடைத்துவிட்டதால்..........

Thursday, May 28, 2009

நீயும் அழகில்லை...
நானும் அழகில்லை...
ஆனால்
நம் காதல மட்டும்
அழகு....