Friday, December 30, 2016

இரண்டு நாட்களாக ராமமோகன ராவ் வீட்டில் இதுதான் நடந்தது! #PhotoStory

ரண்டு நாட்களாய் அனைவரும் உச்சரிக்கும் பெயர் ராமமோகன ராவ். இவர், நேற்று வரை தமிழகத் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர். வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையால் அவர் வீட்டில் இருந்து ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கின. பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு அவர் வகித்த பொறுப்பைப் பறித்துக்கொண்டது. அந்தக் காட்சிகளை அழகாய் உணர்த்துகின்றன இந்தப் படங்கள்!

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/75668-what-happened-at-ramamohan-rao-house-photostory.art
நன்றி: விகடன் இணையதளம்

“அ.தி.மு.க-வுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்!” - பொதுக்குழு தீர்மானங்கள்

மிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்றது.
ஜெ. மறைவுக்குப் பின்னர், யாரைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலையில், அவரது நீண்டகால தோழியான வி.கே.சசிகலாவை கட்சித் தலைமைப் பொறுப்பேற்குமாறு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், முதல்வர் ஒ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் போயஸ் கார்டன் சென்று தொடர்ந்து வலியுறுத்தினர். 
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/76240-sasikala-should-lead-aiadmk----general-body-resolutions.art
நன்றி: விகடன் இணையதளம்

2016-ன் இந்திய நிகழ்வுகள்... ஒரு பார்வை! #2016Rewind

ன்னும் சில தினங்களில்... இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன 12 மாதங்களில், எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள்... இனிய சம்பவங்கள்... அறிவியல் புதுமைகள்.... துயர நிகழ்வுகள்... இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம். அதுபோல், இந்த ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே...

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/76124-2016-a-mixed-year-for-india-2016rewind.art

நன்றி: விகடன் இணையதளம்

Saturday, December 24, 2016

“அரசின் கொள்கைகள்தான் எங்களைக் கொல்கிறது!”: விவசாயிகள் #FarmersDay

‘உலகை, உள்ளங்கையில் கொண்டுவருபவன் விஞ்ஞானி... உணவை, உள்ளங்கைக்குக் கொண்டுசெல்பவன் விவசாயி’ - என்ற ஒரு கவிஞனின் வரிகளுக்கு ஏற்ப... விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி, ‘விவசாயிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. விவசாயிகள் இல்லை என்றால், உலகமே இருட்டாகி விடும் என்பது உண்மை. ஆனால், கால வெள்ளத்தில்... அந்த விவசாயிகளும் அழிந்து வருகிறார்கள் என்பதும் உண்மை.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/india/75708-policies-of-govt-killing-us--farmers-farmersday.art

நன்றி: விகடன் இணையதளம்

Wednesday, December 14, 2016

தொடரும் ஒருதலை காதல் விபரீதம்!

காதல் என்றாலே பிரச்னைதான் என்றாகி விட்ட இந்த உலகில், அதனால் எத்தனையோ உயிர்கள் பலியாகி வருகின்றன. ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்பதுபோல... பழங்காலம் தொட்டு இன்றுவரை காதலுக்குதொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புவதோடு வன்முறை, கலவரம், கொலை, ஆணவக் கொலை ஆகியவையும் அரங்கேறுகின்றன. அதிலும் சமீபகாலமாக,‘ஒருதலை காதல்’ என்கிற பெயரில்... சில வெறிபிடித்த ஆண்கள், இளம்பெண்களின் உயிரைக் காவு வாங்கிவிடுகின்றனர். இதனால் அவர்கள், அந்தப் பெண்களுடைய வாழ்க்கையையும் அழிப்பதோடு, தங்களுடைய வாழ்க்கையையும் அழித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் நடந்த பல கொலைகளுக்கு, ஒருதலை காதலே முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. காரைக்காலில் கடந்த 2012-ம் ஆண்டு ஒருதலைக் காதலால், வினோதினி என்ற பெண், ஆசிட் வீச்சுக்குப் பலியானார். அன்று ஆரம்பித்த இந்த ஒருதலை காதலின் கொலை பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுகுறித்த ஒரு ஃப்ளாஷ்பேக்....

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க:http://www.vikatan.com/news/tamilnadu/74612-problem-continues-stalkers-turn-murderers-in-tamil-nadu.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

வர்தா : நேற்று ஒரு நாள் இப்படி தான் கழிந்தது சாமான்யனுக்கு!

‘கடல் பகுதியில் தோன்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே... பின்னர், படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாறுகிறது’ என்பதுதான் புயலின் அறிகுறி ஆகும். என்றாலும், இந்த தாழ்வுநிலை சில சமயங்களில் வலுவிழந்து விடுவதும் உண்டு. ஆனால், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து, கடந்த 8-ம் தேதி புயலாக மாறியது. இதற்கு, ‘வர்தா’ என்று பெயரிடப்பட்டது. இது, ‘12-ம் தேதி சென்னையில் கரையைக் கடக்கும்’ என்று வானிலை மையத்தால் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது. முன்னதாகவே தகவல் சொல்லப்பட்டதால், சென்னைவாழ் மக்கள், அதுகுறித்து அச்சப்படவில்லை. காரணம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பும், ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத தவிப்புமே மக்களைப் பெருத்த கவலையடையச் செய்திருந்தது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74820-vardah--this-is-how-common-man-dealt-with-cyclone-.art

நன்றி: விகடன் இணையதளம்

வர்தாவின் ஒருநாள்...

அலுவலக வேலையை முடித்துக்கொண்டு 9-12-16-ம் தேதி இரவு 10 மணிக்கு ஊருக்குச் சென்றேன். அங்கு, தண்ணீர் இல்லாமல் கருகி நிற்கும் நெற்பயிர்களைக் கண்டேன்; ஆடு, மாடுகளை விட்டு மேய்க்கும் அவலத்தையும் பார்த்தேன். வீட்டுக்குள் வந்து தொலைக்காட்சி முன்பு அமர்ந்துபோது, ‘12-ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையைக் கடக்கும்’ என்று வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்ட செய்தியைக் காண முடிந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவு (11-12-16) சென்னை செல்வதற்காக காலையிலேயே தயார் ஆன என்னை வீட்டில் உள்ளவர்கள், ‘‘இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போங்கள்’’ என்று தடுத்தார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்ததில்... காலைப் பயணத்தில் முட்டுக்கட்டை விழுந்தது. இருந்தாலும், மதியம் குழந்தைகளுடன் விளையாட்டு, நல்ல விருந்து, சிறு உறக்கம் போக மீண்டும் மாலையிலேயே சென்னை செல்லத் தயாராகிவிட்டேன். வீட்டைவிட்டு இரவு 7.30 மணிக்குப் புறப்பட்ட நான், ஒரு தோசையோடு வயிற்றுப் பசியை முடித்துக்கொண்டு சரியாய் 9 மணிக்கு புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தேன். அப்போதே கண்மூடி தூங்கிய நான், குளிரால் உடல் நடுங்கியபோது மணியைப் பார்த்தேன். சரியாக ஐந்தைக் காட்டியது. அரை தூக்கத்தில் இருந்த நான், சென்னையைத் தொட்டுவிட்டோம் என்பதை புரிந்துகொண்டு பேருந்தின் கண்ணாடி வழியாக சாலையைப் பார்த்தபோது... கனமழையில் சென்னை நகரமே நனைந்துகொண்டிருந்தது. பிறகு, மீண்டும் உறக்கத்துக்கு தள்ளப்பட்டேன். கோயம்பேடு வந்ததை... நடத்துநர் தன் குரல் மூலம் அறிவித்தார். மழை பொழிவதைப் பார்த்து மனம் இரக்கப்பட்ட ஓட்டுநர், பேருந்தை... நிலையத்துக்குள் விட்டார். மழையில் நனைந்தபடியே வந்து சூடான ஆவின் பாலைப் பருகினேன். அருகில் வந்த ஒரு பெரியவர், ‘‘எனக்கும் ஒன்று வாங்கித் தர முடியுமா’’ என்றார். அவருக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டு அயனாவரம் நோக்கிச் செல்லும் தட எண்களின் பேருந்தின் இருப்பிடத்தை நோக்கி ஓடினேன். அரை மணி நேரம் காத்திருப்புக்குப் பின் மழைநீரில் நீந்தியபடி மாநகரப் பேருந்து ஒன்று வந்தது. அப்போது சரியாக மணி ஏழு. காற்றும் கனமழையும் சென்னை நகரில் ஆதிக்கம் செலுத்தியிருந்ததால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. 7.40 மணிக்கு நான் இறங்கவேண்டிய பஸ் நிறுத்தத்தில் இறங்கி... மழையில் நனைந்தபடியே தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். காலைக் கடன்களை முடித்து... குளித்துவிட்டு அலுவலகத்துக்குத் தயாரானபோது... அருகில் இருந்த நண்பர் சூடாக இரண்டு தோசைகளைச் சுட்டுக்கொண்டுவந்து சாப்பிடக் கொடுத்தார். சாப்பிட்டு முடித்த அடுத்த வேளை... காற்றா, கனமழையா என்று இரண்டும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தன. அப்போது முடிவுசெய்தேன்.... இனிமேல் அலுவலகம் செய்வது ஆபத்து என்று... அறைக்குள்ளேயே முடங்கினேன். புயலை ரசித்துப் பார்க்க மொட்டை மாடிக்குச் சென்றேன்... ‘‘மரியாதையாய் உள்ளே போய்விடு’’ என்று மிரட்டுவதைப்போல் அதன் நிகழ்வுகள் இருந்தன. அதையும் மீறி நான் நின்றபோது என்னையே இழுத்துக்கொண்டு செல்ல அது திட்டமிட்டது. இனிமேல் அதனிடம் போட்டி போட முடியாது என்றபடியே கீழிறங்கிவந்தேன். அது ஆடிய பேயாட்டத்தில் பூட்டியிருந்த பக்கத்து அறை ஜன்னல்களும், கதவுகளும் டப்.. டப் என்று இரைச்சலை எழுப்பிக்கொண்டு இருந்தன. உடைந்து இருந்த ஜன்னல் வழியாக என் அறைக்குள் மழைநீர் வந்தது. அதை, சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காரணம், தண்ணீரை உள்ளே விடாமல் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், அந்த அறைக்குள்தான் துணிமணிகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும், இதரப் பொருட்களும் குழுமியிருந்தன. அவை நனைந்துவிட்டால் மழையா வருத்தப்படப் போகிறது. நான் தானே! ஆகையால் வெளியில் கிடந்த மரப் பலகையை வைத்து ஓரளவுக்கு தண்ணீர் வராதபடி அடைத்தேன். பின்பு, ஜன்னல் வழியே என் தெருச் சாலையை எட்டிப் பார்த்தேன். மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துச் சென்ற ஒரு குமரியை, காற்றோ, அந்தக் குடையை உடைத்து கலாட்டா செய்தது. கனமழையோ குளிக்கவைத்து ரசித்துப் பார்த்தது. கண்மூடி திறப்பதற்குள் ஆயிரம் வாகனங்கள் பறக்கும் அந்தத் தெரு வெறிச்சோடி இருந்தது. மழைநீர் தார்ச்சாலையையும் மறைத்து இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் மின்கம்பங்கள் சரிந்துவிழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மொபைல் போனிலிருந்து யாருக்கும் தகவல் சொல்ல முடியவில்லை. கூடவே சார்ஜ் இறங்கிக்கொண்டிருந்தது. சுகர் பேஷன்ட்டாய் இருக்கும் ஒருவர், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாவது வயிற்றில் ஒன்றைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், கடைகள் எதுவும் இல்லாததால் அந்த வேலையைத் தண்ணீர் மட்டுமே செய்துகொண்டிருந்தது. அதன்மூலம் என் பசியைப் போக்கிக்கொண்ட நான் மேன்ஷனுக்குப் பின்னால் பார்த்தபோது மாமரமும், நெட்லிங் மரமும் முறிந்து விழுந்திருந்தன. மதியம் மழைவிட்ட நேரத்தில் மீண்டும் மாடிக்குச் சென்று சுற்றுப் பகுதிகளைப் பார்வையிட்டபோது எதிர்வீட்டில் இருந்த சிமென்ட் கூரைகள் பெய்ர்த்து எறியப்பட்டிருந்தன. பல மரங்கள்... வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மீது விழுந்துகிடந்தன. மாடி வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் தூக்கி வீசப்பட்டிருந்தன; காயப் போட்டிருந்த துணிகள் காற்றாடிபோல் பறந்துபோய் எங்கோ விழுந்துகிடந்தன. விதியை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களும், போர்டுகளும் வீதிக்கு வந்தன; சாலைகளில் மரக் கிளைகளும், இலைகளும் குப்பைபோல் சேமித்துவைக்கப்பட்டிருந்தன. பேயாட்டம் ஆடிய மரங்கள், இலைகள், முறிக்கப்பட்ட கிளைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கேபிள் வயர்கள் போன்றவற்றால் சாலைகள் எல்லாம் போர்க்களம்போல் காட்சியளித்தன. பக்கத்து வீட்டில் தென்னை மரம் எதிராளி ஒருவர் வீட்டி மொட்டை மாடிமீது இளநிகளையும், தேங்காய்களையும், ஓலைகளையும் இறக்கிவைத்திருந்தது. புயலின் கோரத் தாண்டவத்திலும் ஒருசிலர், அதிலும் ஜாலியாய் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். பின்பு, பசி வயிற்றைக் கிள்ளியெடுக்க ஆரம்பித்தவுடன், தெருவில் நடக்க ஆரம்பித்தேன். எதையும் சாப்பிட வேண்டும் என்றால் முதலில் பணம் வேண்டும். அதற்காக ஏ.டி.எம்-களை நோக்கிப் படையெடுத்தேன். அவை, தன்னிடம் பணம் இல்லை என்பதை நாட்கள்தான் பல்லை இளித்துக் காண்பித்துக்கொண்டிருக்கும் எனத் தெரியவில்லை. இது, இன்று நேற்றா நடக்கிறது. மோடி அறிவித்த நாள் முதல் இதே பிரச்னைதான்.

Wednesday, December 7, 2016

ஜெயலலிதாவின் மனங்கவர்ந்த நாவல் இதுதான்!

‘சந்தியாவின் மகளாய் பிறந்தார்... இந்தியாவின் மகளாய் மறைந்தார்’ என்ற வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர், மறைந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும்... அவர் செயல்படுத்திய திட்டங்களும், சாதனைகளும் என்றும் மக்கள் மனதைவிட்டு அகலாதவை. அவர், திரை மற்றும் அரசியல் வாழ்க்கையில் மட்டும் கோலோச்சவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் புலமை வாய்ந்த பெண்மணியாக ஜொலித்த ஜெயலலிதாவுக்கு எழுத்துகள் என்றால் உயிர். தன்னுடைய சிறு வயதிலேயே ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் புத்தகம் படித்தவர் அவர். இலக்கியத்தின் மீதும், எழுத்துகளின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்த ஜெ-வின் இன்னொரு பயணம்தான் இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74437-do-you-know-which-novel-jayalalithaa-likes.art

நன்றி: விகடன் இணையதளம்

நெல்சன் மண்டேலா, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ அரவிந்தர் ஆகியோர் பட்டியலில் ஜெயலலிதா..!

ரந்து விரிந்த இந்த உலகில்...விடிகின்ற ஒவ்வொரு நாளும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது... வன்முறை, கலவரம், கொலை போன்றவையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதையும்தாண்டி அவை, அதிசயமானதாகவோ, அறிவியல் நிகழ்வாகவோ, ஆற்றல் வாய்ந்ததாகவோ இருக்கலாம். இவை மட்டும்தான் அன்றைய நாளில் இடம்பிடிக்கும் நிகழ்வுகளா? இல்லையே. இதே நாளில் சில பெரிய மனிதர்களின் இறப்புகளும் நடந்துள்ளன அல்லவா. ஆம், டிசம்பர் மாதம் 5-ம் தேதியில் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில முக்கியமானவர்களைப் பார்ப்போம்...

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74305-famous-persons-who-died-on-december.art

நன்றி: விகடன் இணையதளம்

குழந்தைகளுக்கு ஜெயலலிதாவின் கடைசி அறிவுரை என்ன தெரியுமா?

'அம்மா’ எனும் மூச்சுக்காற்று அடங்கியதால்... தமிழகம் இன்று சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் துணிச்சல் மிக்க பெண்மணியாக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவர், அரசியலிலும்... திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து, அவை அனைத்திலும் இமாலய வெற்றி கண்டவர். தமிழக மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரான அவர், குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர் என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணம். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/74326-jayalalithaas-advice-to-students.art

நன்றி: விகடன் இணையதளம்

Saturday, December 3, 2016

ஜெயலலிதாவின் அப்போலோ அனுமதி முதல் ’வாக்காளர்களுக்கு நன்றி’ வரை...! அப்போலோ60... தொகுப்பு - ஜெ.பிரகாஷ்

இந்த கட்டுரையின் ஆல்பத்தைப் பார்க்க: http://www.vikatan.com/news/album.php?&a_id=6180
நன்றி: விகடன் இணையதளம்

மதுரையின் 'கதி'?! மனம் வருந்திய பாண்டித்துரை! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

செந்தமிழ் வளர்த்த செல்வப் பாண்டியன்; சங்கம் நிறுவிய சான்றோன்; கல்வியையும், செல்வத்தையும் ஒருங்கே பெற்ற மாமனிதன்; பாலவநத்தம் ஜமீன்தாரின் மகன்.. இப்படிப் பல்வேறு புகழுரைக்குச் சொந்தக்காரர் பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரையார். அவருடைய நினைவு தினம் இன்று....
புலவர்கள் நிறைந்த அவைக்களம்!
பாண்டிய நாட்டின் ஒரு பாளையப் பகுதியாக ராமநாதபுரம் இருந்த காலம் அது. அங்கு, இசைமேதையும் ஜமீன்தாரருமாக விளங்கிய பொன்னுச்சாமிக்கு, மகனாகப் பிறந்தவர்தான் பாண்டித்துரை. இவர் 1867-ம் ஆண்டு மார்ச் 21-ம் நாள் பிறந்தார். உக்கிரபாண்டியன் என்பது அவரது இயற்பெயர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த பாண்டித்துரை, கவர்ச்சியான தோற்றமும், இனிமையாகப் பேசும் ஆற்றலும் கொண்டிருந்தார். ஆசான் அழகர் ராசுவிடம் நற்றமிழையும், வழக்குரைஞர் வேங்கடசுவர சாஸ்திரியிடம் ஆங்கிலத்தையும் பயின்றார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/73973-tamil-scholar-pandithurai-death-anniversary-special-article.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்