Saturday, April 29, 2017

பள்ளிக்கூடம் போகலாம்!

பட்டுச்சட்டை போட்ட பாப்பா...
பள்ளிக்கூடம் போகலாம் வா!

அனைவருடனும் பழகலாம்...
ஆடிப்பாடி மகிழலாம்...
துள்ளிக்குதித்து ஓடலாம்...
துரத்திப்பிடித்து விளையாடலாம்...

சட்டையும் முட்டையும் கிடைக்குமே...
சத்தான உணவும் கிடைக்குமே...
புத்தகமும் நோட்டும் தரப்படுமே...
புதிதாய் அறிவும் வளர்ந்திடுமே...

''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்!'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

''எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல... பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன்; அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்''  தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னபோது கூறிய வார்த்தைகள் அவை. அவருடைய பிறந்த தினம் இன்று.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/87831-only-a-tamil-can-save-another-tamil-says-era-sezhiyan.html

நன்றி: 'விகடன்" இணையதளம்

“தகிக்கும் வெப்பம்... அனல் காற்று... இந்தியாவில் எத்தனை பேரை பலி கொண்டிருக்கிறது?!” #VikatanPhotoStory

வெயில் பற்றிய விஷயங்களையும், அதிலிருந்து தப்பிக்கச் சில வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்....
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7314-scorching-summer-suffering-people.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

Wednesday, April 26, 2017

உ.பி முதல்வர் ஆதித்யநாத்தின் 20 அதிரடி உத்தரவுகள்! #VikatanPhotoStory

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடி உத்தரவுகளையும், அவருடைய படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7289-twenty-orders-of-yogi-adityanath.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

Sunday, April 23, 2017

''சிவப்புக்கொடி பறந்தால்தான் பணிகள் நடக்கும்!'' - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் 'பாட்டுக்கோட்டை' என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருடைய பிறந்த தினம் இன்று. தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: 
http://www.vikatan.com/news/miscellaneous/86354-birthday-special-article-of-pattukottai-kalyanasundaram.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

“அம்பேத்கர் வாழ்வும்...வாக்கும்!” #VikatanPhotoCards

அம்பேத்காரின் அரிய படங்களையும், அவருடைய வாக்குகளையும் அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7172-218133-best-quotes-of-ambedkar.album

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் நூதனப் போரட்டங்கள்! #VikatanPhotoStory

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய பல்வேறு வகையான போராட்டங்களின் படங்களில் சிலவற்றைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7205-protest-by-farmers-in-delhi.album

உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்! - #HBDHitler #VikatanPhotoCards

அடால்ப் ஹிட்லரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் உதித்த சிந்தனைகளையும், அவருடைய படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7233-.album

“மாறுங்கள்... இல்லையெனில் காணாமல் போவீர்கள்!

ஏப்ரல் 22-ம் தேதி பூமி தினத்தை முன்னிட்டு அது தொடர்பான பொன்மொழிகளையும் படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7259-220695-let-us-know-about-our-mother-nature-on-earth-day.album

Tuesday, April 11, 2017

''ஆர்.கே.நகர் தேர்தலால் அ.தி.மு.க-வில் இன்னும் மாற்றம் வரும்!''

''ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படும்'' என்கின்றனர், அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவானது. ஜெயலலிதா தலைமையின் கீழ் மிகவும் கட்டுக்கோப்புடன் இருந்த அ.தி.மு.க., தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது. அவரது மறைவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் தன்வசம் கொண்டுவர சசிகலா மேற்கொண்ட முயற்சி முழு அளவில் பலனளிக்காமல் போனதே இந்தப் பிளவுக்குக் காரணம் எனலாம். ஓ.பன்னீர்செல்வம், ஜெ-வின் உண்மையான விசுவாசி எனப் பெயரெடுத்ததுடன், அவருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகி (ஜெ. மறைவின்போது) மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது... சசிகலா மற்றும் அவரது மன்னார்குடி உறவுகளின் மிரட்டலுக்கு வளைந்துகொடுக்காமல் தனி அணியாகப் பிரிந்தார்.
பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருப்பது தெரிந்தும் முதல்வர் பதவி ஏற்க முயற்சி மேற்கொண்டார். இதனால், ஓ.பி.எஸ்ஸுக்கும், சசிகலா தரப்புக்கும் மோதல் வெடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி இரவு சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதி முன்பு திடீர் தியானம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால், தமிழக அரசியலே தடம்புரண்டது. பதிலுக்கு சசிகலா தரப்பும் பன்னீர்செல்வத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 
உடைந்த அ.தி.மு.க.!
நாளுக்குநாள் அவர்கள் இருவருக்கும் மோதல் முற்றத் தொடங்கியதையடுத்து, சசிகலா தரப்பில் ஓர் அணியாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் மற்றோர் அணியாகவும் அ.தி.மு.க இரண்டாகப்  பிரிந்தது. இந்நிலையில்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றனர். இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு பெருக, சசி அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் படையெடுக்கத் தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த பலரை பணத்தையும், பதவியையும் காட்டி விலை பேசியது. அதற்கு விலைபோனவர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
இந்த நிலையில்தான், ஆர்.கே.நகர்த் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும், 12-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரைத் தவிர, பலம் பொருந்திய தி.மு.க., ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா, இன்னும் பிற கட்சிகளும் களத்தில் குதித்திருக்கின்றன. அ.தி.மு.க-வின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்குப் போட்டிபோட்டு...சசி அணியும், ஓ.பி.எஸ் அணியும் தேர்தல் ஆணையத்தை நாடின. ஆனால், விளைவு இரண்டுக்குமே அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. மாறாக, வெவ்வேறு சின்னங்களும், வெவ்வேறு பெயர்களும் வழங்கப்பட்டன. 
மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு!
இதனையடுத்து, தீவிர பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர். ஆர்.கே.நகர்த் தொகுதியைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ் அணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மதுசூதனனுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசி அணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றபோதும், அவர் குடும்பம் சம்பந்தப்பட்டவரே ஆட்சியையும், கட்சியையும் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகச் சசிகலாவுடையச் சகோதரி மகனான டி.டி.வி.தினகரனே இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டார். ஏற்கெனவே, அந்த அணி மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தி, இந்தச் செயலால் மேலும் அதிகமானது. இதனால் கலக்கம் அடைந்த தினகரன் ஆதரவாளர்கள், இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் தவிர, இன்னும் சில கட்சியினரும் மக்களைப் பணத்தால் வளைக்க முயற்சி செய்கின்றனர். 
பணப் பட்டுவாடா!
இந்தநேரத்தில்தான் வருமானவரித் துறை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தியது. அத்துடன், ஆர்.கே.நகர் முழுவதிலும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களை மிஞ்சும்வகையில் பணப் பட்டுவாடா மிகவும் ஜரூராகவே நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தொகுதியில் உள்ள முக்கியப் புள்ளிகள் மூலம் வாக்காளர்களை வேறோர் இடத்துக்கு வரச் சொல்லி பணப் பட்டுவாடா நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வாக்காளர்களோ, நேரடியாகப் பணத்தைப் பெறாமல், அந்த மதிப்புக்குரிய வீட்டுஉபயோகப் பொருட்களை கடைகளில் இருந்து எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. 
''அ.தி.மு.க-வில் இன்னும் மாற்றம் வரும்!''
இந்நிலையில்,அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர். ''தற்போது அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்துகிடக்கிறது. இது, இல்லாமல் தீபா அணி வேறு களத்தில் உள்ளது. ஆக, அ.தி.மு.க மூன்று அணிகளாக இத்தேர்தலை எதிர்கொண்டிருப்பதால், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அ.தி.மு.க தொண்டர்கள்.. ஏன் சட்டமன்ற உறுப்பினர்களேகூட, ஓர் அணியைவிட்டு மற்றோர் அணிக்குத் தாவும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தற்போது, குழப்பமான மனநிலையில் உள்ள அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஒரு தெளிவான விடை காணும் வகையில்தான் இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. இthiல் வெற்றிபெறும் அணியே மேலும் வலுப்பெறும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தவிர, ஒருவேளை தினகரன் வெற்றிபெறும்பட்சத்தில், அவர்  முதல்வர் பதவி ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அரசு நிர்வாகம் தலைகீழாக மாறும் சூழ்நிலை உருவாகக்கூடும். அவர் வைத்ததே சட்டமாக இருக்கும் என தற்போது பதவியில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு தினகரன் மரியாதை கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாகி இருப்பதால், ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் முடிவு, அ.தி.மு.க-வில் இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த இடைத்தேர்தல்தான் ஒரு திருப்புமுனையாக இருக்கும்'' என்கின்றனர். 
ஒருதொகுதியின் இடைத்தேர்தலால் திருப்புமுனை ஏற்பட்டால் சரிதான்!
- ஜெ.பிரகாஷ்

"சாலையில் திடீர் பள்ளம்: நடந்தது என்ன?" நடத்துநர் பேட்டி!

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் திடீரென்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கிக் கொண்டதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/85892-reason-behind-cave-in-on-chennais-anna-salai.html

நன்றி: விகடன் இணையதளம்

காந்திக்கும் கஸ்தூரிக்கும் இடையிலான காதலின் மின்னல் தருணங்கள்! - கஸ்தூரிபாய் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

து, ஓர் ஏழு வயது சிறுமியின் வீடு.  அந்த வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் கூடியிருந்தனர். அவர்களுடன், ஜோசியரும் புரோகிதரும்கூட. முக்கியமாய் பக்கத்துவீட்டு மோகன்தாஸின் அப்பா. இதனால் அங்கு, மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ''எப்போதும், நம் தந்தையைக் காண வியாபார நண்பர்கள்தானே வருவார்கள்; ஆனால், இந்த முறை இவர்கள் வந்திருப்பது எதற்கென்று தெரியவில்லையே? அது என்னவோ, நமக்கேன் வம்பு... பெரியவர்கள் விஷயம்'' என்று நினைத்தபடியே தோட்டத்துக்குள் ஓடினாள், அந்தச் சிறுமி. அவர், வேறு யாருமல்ல... மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ்) மனைவி கஸ்தூரிபாய். அவருடைய பிறந்த தினம் இன்று. 

http://www.vikatan.com/news/miscellaneous/86058-this-is-what-kasturba-gandhi-said-about-gandhi-birthday-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது யார் பொறுப்பு?” - தலாய் லாமா பதில்

“தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம்; சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950-களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. ஆனால், 1959-ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது'' - இப்படித் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த மனிதர் வேறு யாருமல்ல... புத்த மதத் தலைவர் தலாய் லாமா.

இந்தக் கட்டுரையை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/india/85321-people-should-dedicate-themselves-for-peace-dalai-lama.html

நன்றி: 'விகடன்' இணையதளம்