Friday, March 31, 2017

தீபா முதல் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை வரை... தீபாவின் தடாலடிகள்! #VikatanPhotostory

தீபா முதல் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை வரை... தீபாவின் தடாலடிகள்! #VikatanPhotostory


இந்தப் புகைப்படத் தொகுப்பைக் க்ளிக் செய்ய... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7044-the-activities-of-deepa-in-politics.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

விவசாயிகள் பிரச்னை குறித்து பிரபலங்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? #VikatanPhotoStory

விவசாயிகள் பிரச்னை குறித்து பிரபலங்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? #VikatanPhotoStory

இந்தப் புகைப்படத் தொகுப்பைக் க்ளிக் செய்ய.... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7053-what-our-celebrities-have-to-say-about-farmers-issue.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஆர்.கே. நகர் மக்களின் முக்கியப் பிரச்னைகள் இவைகள்தான்!

டைத்தேர்தலால், தற்போது சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி களைகட்டி வருகிறது. இதனால், பிரதானக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதில் சிலர், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவீசியிருக்கின்றனர். இந்த நிலையில், அந்தத் தொகுதி மக்கள், ''பொதுவாக எங்கள் தொகுதியில் காலங்காலமாக இருக்கும் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தாலே... ஆர்.கே.நகர்த் தொகுதி முன்மாதிரியாக மாறிவிடும். ஆனால், அந்தப் பிரச்னைகளை இந்தத் தொகுதியிலிருந்து வென்ற எந்த எம்.எல்.ஏ-க்களும் இதுவரை செய்யவில்லை'' என்று சொல்லும் அவர்கள், கீழ்க்கண்ட அந்தப் பிரச்னைகளைப் பட்டியலிடுகின்றனர். 

மேலும் இந்தக் கட்டுரையின்  தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/84994-these-are-the-major-issues-faced-by-rk-nagar-people.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

எம்.ஜி.ஆர் சமாதிக்கு வைகோ சென்றது ஏன்?

ந்தாரை வாழவைக்கும் அன்னையாக விளங்கும் சென்னையில், அதன் செல்லக் குழந்தையாக இருந்து அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் மெரினா கடற்கரைக்கு தனிப்பங்கு உண்டு. இது, 'சென்னைப் பெருநகரத்தின் நுரையீரல்' என அழைக்கப்படுவதுடன், நகரின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. உலகின் இரண்டாவது மிக நீளமானக் கடற்கரையைக் கொண்டு திகழும் மெரினா பீச், சென்னையின் பொழுதுபோக்கு அம்சமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இதற்குக் காரணம், மெரினா கடற்கரையில்தான் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளும், பல தலைவர்களின் சிலைகளும் அமைந்துள்ளன. இவைதவிர மாநகராட்சி சார்பில் சிறுவர்களுக்கான நீச்சல் குளம் மற்றும் கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியனவும் இடம்பெற்று கூடுதல் சிறப்புச் சேர்க்கின்றன.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/85072-this-is-why-vaiko-went-to-mgr-memorial.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

Tuesday, March 28, 2017

இப்படிதான் இந்தியாவில் ஊடுருவியது சீமைகருவேலமரம்! #VikatanPhotoStory

சீமைக் கருவேல மரங்கள் பற்றிய வரலாற்றையும் அதன் படங்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/6983-.album

நன்றி: 'விகடன்' இணையதளம்


“தேர்தலில் வெற்றிபெற்றால், மறுநாளே ராஜினாமா!” இப்படிச் சொன்னவருக்கு இன்று பிறந்தநாள்

வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கக் கூடிய கல்வியை, ஒரு கடமை உணர்வோடு கற்க வேண்டும்; கல்லூரியில் பயிலும் காலத்தில் களியாட்டங்களில் நாட்டங்கொண்டு சக்திகளை வீணாக்காமல், அதை நன்முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்; நீங்கள் சமுதாயத்தின் வேலையாட்கள் என்பதை நினைவில்கொண்டு நல்ல பண்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பல உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும்'' என்கிற கல்விக்கான மகத்துவத்தை, ஒரு கல்லூரி நிகழ்வின்போது மாணவர்களிடம் வலியுறுத்தியவர் ஜி.டி.நாயுடு என்கிற ஜி.துரைசாமி. அவருடைய பிறந்த தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/84379-i-will-resign-the-next-day-after-winning-the-elections-story-remembrance-on-gdnaidus-birth-anniversary.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

20 புகைப்படங்களில் ஆர்.கே.நகர் வரலாறு! #VikatanPhotoStory

ஆர்.கே.நகர் வரலாறு தொடர்பான புகைப்படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7036-history-of-rk-nagar-constituency-in-20-images.album

நன்றி 'விகடன்' இணையதளம்

Monday, March 20, 2017

''இனிமேல் அவரைப் பேச விடக்கூடாது!'' ராதாரவியைக் கண்டிக்கும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்

தி.மு.க தலைவர் கருணாநிதியால் பெயர்சூட்டப்பெற்றவர்கள்  ராதாரவிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள். அவர்களின் மனம்குன்றும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளதுடன், அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தவிருக்கிறது. 
ராதாரவி. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசு. அ.தி.மு.க-வில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த ராதாரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்தார். இவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இருப்பதோடு... மனம் நெருடும் கருத்துகளும் இருக்கும். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, பா.ம.க நிறுவனர் ராமதாஸையும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு... கிண்டலடித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சைக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுத்தான் இப்போது ராதாரவிக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82723-radharavi-faces-the-heat-as-he-mocked-differently-abled.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர். 
'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83303-party-cadre-collapsed-at-aiadmk-welfare-distribution-meeting-party-chief-doesnt-bother.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

”நாம் ஏமாறுவதற்கு நாமே துணைநிற்கிறோம்” நுகர்வோர் ஏமாறுவது இப்படிதான்!

மாறுபவர்கள் இருக்கிறவரை உலகம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கும். இயந்திரமயமான இன்றைய உலகில்... நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். அது, நம்முடைய அறியாமையால் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது, திரையரங்குகள் மற்றும் சில இடங்களில் பாதிக்கப்படும்போது எனப் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தே ஏமாறுகிறோம். இதற்கு, விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லாததே காரணம். இப்படி, இந்த உலகத்தில் ஏமாற்றப்படும் ஒவ்வொரு மனிதரும் நுகர்வோரே. அவர்கள் அனைவரும் தமது உரிமையைக் காத்திடவும், ஏமாற்றத்தைத் தவிர்த்திடவும் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காகத்தான் ஆண்டுதோறும் மார்ச் 15-ம் நாள் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் புரட்சிகரமான அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதாவது, 1983-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் உலகம் முழுவதும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83720-world-consumer-rights-day-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

பன்னீர்செல்வம் அணியிலிருந்து தீபா விலகியிருக்கக் காரணம் என்ன?

அ.தி.மு.க-விலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தவர் தீபா. தற்போது அவர்களிடமிருந்து விலகியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று விடை தேடி அவருடைய ஆதரவாளர்களை நாடினோம்... முழுமையான பதில் கிடைத்தது... அதற்குமுன் தீபா பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்....
'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' !
ஜெ.தீபா. இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (அண்ணன் மகள்) ரத்த சொந்தம். மாதவன் என்பவரை,  தீபா திருமணம் செய்துகொண்டு சென்னை தி.நகரில் வசித்துவருகிறார். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது... அவரைப் பார்க்கச் சென்ற தீபாவை, மன்னார்குடி கும்பல் இடையிலேயே மடக்கித் திருப்பியனுப்பியது. ஜெ-வின் இறப்புக்குப் பிறகு அம்மாவின் உண்மையான விசுவாசிகளும், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களும் தீபாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். இதனால் தினந்தினம் அவர் வீட்டுமுன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி, அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். பல நாள்கள் காலம் தாழ்த்திவந்த தீபா, நீண்ட யோசனைக்குப் பிறகு... அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். அதன் காரணமாக, அவருடைய அத்தையின் (ஜெ-வின்) பிறந்தநாளின்போது ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என அதற்குப் பெயரும்வைத்தார். 
மெலும் இந்தக்  கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83887-why-does-not-join-deepa-join-ops-team-.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

இந்தப் பரிசுக்காக காத்திருந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?..#worldtoiletday. தொகுப்பு- ஜெ.பிரகாஷ்

கழிப்பறை பற்றிய செய்திகளையும், படங்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்: http://www.vikatan.com/news/album.php?&a_id=6149&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

கார்ல்மார்க்ஸ் 20 - நினைவு நாள் சிறப்புப் பகிர்வு! #VikatanPhotoStory

கார்ல் மார்க்ஸ் பற்றிய படங்களையும், அவர் சொன்ன பொன்மொழிகளையும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/6905-211432-twenty-inspirational-quotes-of-karl-marx.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டது எப்படி?

“சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாகச் சாவதேமேல்'' என இந்தச் சாட்டையடி வார்த்தைக்குச் சத்ய பிரமாணம் எடுத்தவர் ஜூலியஸ் சீசர்.  இந்தப் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகள் அரசு அதிகாரத்துக்கு அடையாளமாக நீடித்த ஒன்று. இவர் பெயரும், இவரது தந்தையின் பெயரும் ஒன்றே.  கேயஸ் ஜூலியஸ் சீசர் என்பதே அது. அவர் கொல்லப்பட்ட தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83681-assassination-of-julius-caesar.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

''காதல் என்றால் ஜென்னி...'' கார்ல் மார்க்ஸ் நினைவுதின சிறப்புப் பகிர்வு

ண்பருடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த அவர், வழியில்... சாலையோரத்தில் ஒரு பெண்ணை அடித்துக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தபிறகு,பேருந்திலிருந்து கீழே இறங்கி... பெண்ணை அடித்தவனை அடிக்கப்போனார். அதற்குள், அந்தப் பெண்ணோ... ''இது எங்கள் குடும்ப விவகாரம். இதில், தலையிட நீ யார்'' என்றார். வேடிக்கை பார்த்த கூட்டமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. பின், ஒருவழியாகக் கூட்டத்தைச் சமாளித்து அங்கிருந்து அழைத்துவரப்பட்டார், அவர். இப்படி அன்றே, மாற்றத்துக்கான விதையை மண்ணில் விதைக்க முற்பட்ட அந்த மாமேதை பொதுவுடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ். அவருடைய நினைவு தினம் இன்று.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83581-karl-marx-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு

''நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்'' - இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து... ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.

மெலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83567-albert-einstein-birthday-special-article.html?artfrm=editor_choice

நன்றி: 'விகடன்' இணையதளம்

பார்பி கேர்ள் உருவான கதை தெரியுமா? #BarbieDolls

குழந்தைகளிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று பொம்மை. அவர்கள் கேட்ட பொம்மையை நாம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்றால், அதையே அவர்கள் உலகம் எனக் கருதி வாழத் தொடங்கிவிடுவர். பொம்மைகளை, குழந்தைகள் மட்டுமல்ல... இன்றைய இளம்பெண்களும் அதிகமாகவே விரும்புகின்றனர். ஆக, பலரும் விரும்பும்வகையில்  பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பார்பி பொம்மை. அது, பிறந்த தினம் இன்று. 
ரூத் ஹேன்ட்லர். இவர், தன்னுடைய  மகள் காகிதப் பொம்மைகளுக்குப் பெரியவர்களின் பெயர்வைத்து விளையாடுவதைக் கண்டு ரசிப்பார். குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அந்தக் காலத்தில் மிகவும் சிறியதாக இருப்பதைக் கவனத்தில்கொண்ட ஹேன்ட்லர், ''வளர்ந்து பருவமடைந்த ஓர் உடலைப் பொம்மையாகச் செய்ய வேண்டும்'' என்று தன் கணவர் எலியட்டிடம் சொன்னார்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83088-history-of-barbie-dolls-barbiedolls.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

கங்கை அமரனை ஆர்.கே. நகரில் களமிறக்கியது எதற்கு?

''நீங்கள், பி.ஜே.பி-யில் இருந்துகொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா'' என்று அப்போது, நம் 'விகடன்' சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுகள் இருப்பினும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, ஓர் அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமைகொண்டு இருக்கிறேன்'' என்றார், இசையமைப்பாளர் கங்கை அமரன். 
அந்த கங்கை அமரன்தான், தற்போது களைகட்டத் தொடங்கியிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர். அ.தி.மு.க-வின் கோட்டையான இந்தத் தொகுதியில், பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒருசில கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர்களைக் களமிறக்கிவிட்டன. சுயேட்சை வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது பி.ஜே.பி-யின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கங்கை அமரன், ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தேர்வானது எப்படி என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83947-why-bjps-gangai-amaran-is-contesting-in-rk-nagar.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: 'விகடன்' இணையதளம்

டி.டி.வி.தினகரன் திடீரெனக் களமிறங்கியது இதற்குத்தான்...!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்தியே தற்போது அனைவருடைய உதடுகளிலும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் நின்ற இந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி எனப் பலமுனைப் போட்டிகள் நிலவுவதுடன்... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் களத்தில் குதிக்கத் தயாராய் இருக்கின்றனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க-வின் வேட்பாளராக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். தீபாவையும் சேர்த்தால், தற்போது நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரையும் எதிர்த்து ஜெயிக்கப்போகிறவர் அந்தத் தொகுதி மக்களின் ஆதரவாளராகவும், அதேசமயத்தில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் யார் வெற்றிபெறுகிறார் என்பதை, தேர்தல் நாள் முடிவன்றுதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலையில் டி.டி.வி.தினகரன், ''இந்தத் தொகுதியில் வேட்பாளராய் களம் காண்பதற்கு என்ன காரணம், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்படுவதற்கு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோது... அவரே இறங்கியது ஏன்'' போன்ற தகவல்களை அ.தி.மு.க-வினர் அடுக்கினார்கள்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83781-this-is-why-t-t-v-dinakaran-contesting-in-rk-nagar.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை!

றைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே. நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதால், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஆனாலும், பிற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய  ஒரு சிறுதொகுப்பு இதோ...

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83866-know-about-the-contestants-of-rk-nagar.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

சீமைக் கருவேலமரத்தின் கதையும்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் நக்கலும்...!

''எங்களை அழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டீர்கள்; அதில், எங்களுக்கு மிகவும் சந்தோஷம். 'என்னால்தான் விவசாயம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுகிறது. ஆகவே, எங்களை அகற்ற வேண்டும்' என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.  இதையடுத்து, 13 மாவட்டங்களில் இருக்கும் எங்களை அகற்ற, இல்லையில்லை அடியோடு அழிக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதற்கான பணிகளும் தீவிரமாய் அரங்கேறிவருகின்றன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் அகற்றப்பட்டு வருகிறோம். எங்களை முழுமையாக முடிப்பதற்குள், எங்கள் கதையைத் தன் வரலாறாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறோம். சீமைக் கருவேல மரம் (சில இடங்களில் காட்டுக்கருவை) என்பதுதான் எங்களுடையப் பெயர் என்பதை முதலில் உங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

மேலும் இதுகுறித்த கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/84049-story-of-prosopis-juliflora-and-evks-elangovans-satirical-comment.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்.... ஒரு பூசாரி முதல்வர் ஆன கதை!

ந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் முதல்வராய்ப் பொறுப்பேற்க இருக்கும் யோகி ஆதித்யநாத், இதற்குமுன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி., பெரும்பான்மையாக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே மாபெரும் வெற்றிபெற்ற பி.ஜே.பி., புதிய முதல்வரைத் தேர்வுசெய்ய ஒருமனதாக முடிவு செய்தது. இதில், அந்த மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச புதிய முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நேரத்தில், அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்துகொண்டிருக்க... மற்றொரு புறம், அவர் முன்னர் ஏற்படுத்திய சர்ச்சைகளும்... வழக்குகளும் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க; http://www.vikatan.com/news/india/84022-travel-of-uttar-pradesh-chief-minister-yogi-adityanath-from-temple-priest-to-chief-minister.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

Saturday, March 11, 2017

“ஊழியர்களின் அலட்சியம்... தவிக்கும் வாசகர்கள்...!” - தேவநேயப் பாவாணர் நூலகத்தின் அவலம்

"என் மனதுக்குப் பேரின்பத்தை அள்ளியள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகம்" என்று சொன்ன ஆபிரகாம் லிங்கனும், "நூலகம் இல்லாத ஊரை நான் ஓர் ஊராக மதிப்பதே இல்லை" என்றுரைத்த  லெனினும், "ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொன்ன சிசரோவும் மாபெரும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய அறிவுப்பசியை, நூலகங்களே தீர்த்திருக்கின்றன. அவர்கள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மாமேதைகளை உருவாக்கியதும், உருவாக்கிக்கொண்டிருப்பதும் நூலகங்கள்தான். 
அறிவுச் செல்வத்தின் சேமிப்புக் கிடங்காக விளங்கும் நூலகம், எல்லோருக்கும் எக்காலத்தையும் இணைத்துவைக்கும் சிந்தனைப் பாலமாக இருக்கிறது. ஆனால், ''அப்படியா இருக்கின்றன இங்குள்ள நூலகங்கள்'' எனக் கேள்வி எழுப்புகிறார் வாசகர் ஒருவர்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82864-concern-over-poor-condition-of--devaneya-pavanar-library.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

ஆர்.கே.நகர் சென்டிமென்ட்டும்... மக்கள் எதிர்பார்ப்பும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக, தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, காலியாகும் சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதியில், ஆறு மாதங்களுக்குள்  இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (9-3-17) தேர்தல் ஆணையம், ''வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்'' என்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15-ம் தேதியும் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83182-these-are-the-expectations-of-rk-nagar-people.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர். 
'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் ப்டிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83303-party-cadre-collapsed-at-aiadmk-welfare-distribution-meeting-party-chief-doesnt-bother.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

Sunday, March 5, 2017

சரோஜினி தேவி சிறைவாசம் அனுபவித்தது இதற்குத்தான்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

''என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள்; ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள். ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணம் புரிந்து மணவாழ்க்கையை நடத்தினேன். எனவே, நான் வங்காளியும் அல்ல; சென்னைக்காரியும் அல்ல; ஹைதராபாத்காரியும் அல்ல. நான் ஓர் இந்தியப் பெண்.'' - இந்த எழுச்சிமிகு வரிகளைத் தன் எண்ணத்தில்கொண்டு, தேசிய உணர்வுடன் வாழ்ந்து மறைந்தவர் கவிக்குயில் சரோஜினி தேவி. அவருடைய நினைவு தினம் இன்று.

மேலும் இந்தக்  கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/82416-sarojini-devi-memorial-day-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

''இனிமேல் அவரைப் பேச விடக்கூடாது!'' ராதாரவியைக் கண்டிக்கும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்

தி.மு.க தலைவர் கருணாநிதியால் பெயர்சூட்டப்பெற்றவர்கள்  ராதாரவிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள். அவர்களின் மனம்குன்றும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளதுடன், அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தவிருக்கிறது. 
ராதாரவி. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசு. அ.தி.மு.க-வில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த ராதாரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்தார். இவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இருப்பதோடு... மனம் நெருடும் கருத்துகளும் இருக்கும். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, பா.ம.க நிறுவனர் ராமதாஸையும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு... கிண்டலடித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சைக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுத்தான் இப்போது ராதாரவிக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது.

மேலும் இதுகுறித்த கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82723-radharavi-faces-the-heat-as-he-mocked-differently-abled.html
நன்றி: 'விகடன்' இணையதளம்