Tuesday, February 28, 2017

அமளிதுமளி சட்டமன்றம்... 1988-லும் 2017-லும் என்ன நடந்தது?

மிழகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று கூடியிருந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். சட்டசபையில் இன்று நடந்த களேபரம்போல் அன்று நடந்தது என்ன? அங்கு, அன்றும் இன்றும் நடந்த சம்பவங்கள் இதோ... 
சட்டசபை அன்று...
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/81255-similarities-between-1988-and-2017-trust-vote.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

Monday, February 27, 2017

'தன் மனைவியை இங்கேதான் கடைசியாகச் சந்தித்தார்...' - அபுல் கலாம் ஆசாத் நினைவு தின சிறப்புப் பகிர்வு!

''மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யத்தில் என் மூதாதையர் உயர்ந்த பீடத்தை அலங்கரித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இன்று எனக்கு மட்டும் தேசபக்தி இருக்காதா என்ன... இருக்கக்கூடாதா என்ன? இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில்தான் நான் பிறந்தேன். ஆனால், இது என் ஜென்ம பூமி. என்னை நீங்கள் ஓய்ந்திருக்கச் சொல்வது, 'புயலே ஓய்ந்திரு; ஆர்ப்பரிக்கும் கடலே தலை சாய்ந்திரு' என்று கூறுவதுபோல் இருக்கிறது'' என அன்றைய வங்க விடுதலை இயக்கத்தின் புரட்சியாளர் ஷியாம் சுந்தர் சக்கரவர்த்தியிடம் சொன்னார், அபுல் கலாம் ஆசாத். அவருடைய நினைவு தினம் இன்று

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/81573-abul-kalam-azad-birthday-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

மஞ்சள் அட்டை திருமணப் பத்திரிகை முதல் - கிரெடிட் கார்ட் பத்திரிகை வரை! #WeddingCards

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்பது உண்மைதான். ஆனாலும் வெவ்வேறு இடங்களிலும், இல்லங்களிலும் அந்தத் திருமண முறைகள் மாறுபடுகின்றன என்பதும் உண்மை. இது ஒருபுறமிருக்க, இன்றைய நவீன உலகில் திருமண நிகழ்வுகள் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆகாயத்தில் பறந்துகொண்டும், கடலுக்கு அடியில் பயணம் செய்தபடியும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைச் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. திருமண நிகழ்வுகளில்கூட பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. அன்று சாதாரணமாக நடைபெற்ற திருமணங்கள், இன்று மிகவும் ஆடம்பரமாக நடக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. திருமணங்கள் இவ்வாறு பல்வேறு விதங்களிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும்போது, அதற்கு அச்சாணியாக இருக்கும் திருமணப் பத்திரிகைகளில் மட்டும் மாற்றம் வராமல் இருக்குமா என்ன?

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/79374-varieties-of-wedding-cards--weddingcards.html

நன்றி: விகடன் இணையதளம்

சிறுகதையின் இலக்கணம் சுஜாதா! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

''தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. அவருடைய நினைவு தினம் இன்று. 
இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர், சுஜாதா. அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும்வரை தொடர்ந்தது. கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர்கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள்கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார். அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/82123-tribute-to-sujatha-rangarajan-whats-special-about-his-novels.html
நன்றி : விகடன் இணையதளம்

Friday, February 17, 2017

அப்போலோ... கூவத்தூர்... சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு இடங்கள்!

லகில் எப்போதாவதுதான் சில அதிரடி நிகழ்வுகள் நடக்கும். ஆனால், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிரடி நிகழ்வுகளாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்களுக்குக் காரணமானவை சசிகலா தரப்பு தேர்ந்தெடுத்த இரண்டு இடங்கள்... அவை, இரண்டும் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அல்ல. ஆனாலும், அ.தி.மு.க-வின் எதிர்கால சக்தியைத் தீர்மானிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடங்களாகவே அந்தக் கட்சியில் பார்க்கப்படுகின்றன. ஒன்று, ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவமனை. மற்றொன்று, சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட். இந்த இரண்டு இடங்களும் மன்னார்குடி வட்டாரத்தின் பாதுகாப்பில் எப்படியிருந்தன என்று பார்ப்போம்....

மேலும் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/80941-apollo-kuvathur-the-two-places-which-were-kept-under-the-control-of-sasikala.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

சசிகலா... சரிவைச் சந்திக்க இதுதான் காரணமா?

“சசிகலாவைத் தவிர, எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை'' என்று ஒருநேரத்தில் தெரிவித்த ஜெயலலிதாவே, இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய நிழலாக, உடன்பிறவாச் சகோதரியாக 34 ஆண்டுகள் பயணம் செய்த சசிகலாவின் கையில்தான் தற்போது அ.தி.மு.க இருக்கிறது. இதற்குக் காரணம், அந்தக் கட்சியில் தனக்குப் பின் யார் என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்படாததும்... மக்களின் பிரதிநிதிகள் பணத்துக்காகவும், பதவிக்காகவும் வளைக்கப்படுவதுமே. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், எப்படி அ.தி.மு.க பிரிந்து கிடந்ததோ, அதேநிலை இன்று உருவாகியிருக்கிறது. ''சசிகலா, பொறுமை காக்காததுதான் இவையனைத்துக்கும் காரணம்'' என அரசியல் நடுநிலையாளர்கள் தெரிவித்த போதிலும், அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளோ பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/81160-is-this-the-reason-why-sasikala-faced-defeat.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

Saturday, February 11, 2017

அதிமுக- ஆட்சியும்.... ஆறு மாதங்களும்!

ந்தியாவில் உள்ள ஒரு மாநிலம், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது என்றால்... அது தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் நடக்கும் குழப்பங்களும் அதிரடி மாற்றங்களுமே அதற்கு சாட்சி. கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பதவியேற்ற அதிமுக அரசின் தொடக்கத்தில் காவிரிப் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது... இதிலிருந்து விடுபட முயற்சி செய்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தல் கழகத் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/80302-happenings-in-admk-for-the-past-six-months.html

நன்றி: 'விக்டன்' இணையதளம்

அணிமாறும் தலைவர்கள்... பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர். இல்லை... இல்லை... ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் முதல்வராக அறிவிக்கப்பட்ட பெயர். அன்று, ஜெயலலிதா அறிவித்ததால்தானோ, என்னவோ தெரியவில்லை, இன்று அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் பலரும் பன்னீர்செல்வம் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். காரணம், தற்போது அந்தக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பூசல்.
குடும்ப அரசியல் என்று எதிர்க்கட்சியால் சொல்லப்பட்டு வந்த தி.மு.க கூட இப்போது அதைச் செய்யவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு... அந்தக் கட்சியில் குடும்ப அரசியல் நுழைந்து விட்டது. இதன் விளைவுதான் அந்தக் கட்சி, இன்று இரண்டாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/80409-this-is-why-o-panneerselvam-garnering-huge-support.html
நன்றி: 'விகடன்' இணையதளம்