Monday, January 30, 2017

முதல்வரே.... இவ்வளவு மோசமாக நீங்கள் இதைக் கையாண்டிருக்க வேண்டாம்...!

அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால், தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு  இது உச்சம் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். ‘மூன்று முறை முதல்வர் பதவி, முதல்முறையாகக் குடியரசு தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி’ என தன் சாதனைப் பயணத்தை நிகழ்த்திவரும் ஓபிஎஸ்-ஸின் ஒவ்வொரு செயல்களும்... அவருடைய அரசியல் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன என்றால், அதை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்? 
அதிர்ச்சியில் உறைந்த அ.தி.மு.க-வினர்!
2001-ம் ஆண்டு டான்சி ஊழல் வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது... ‘அடுத்த முதல்வர் யார்?’ என்ற பரபரப்பு அ.தி.மு.க-வில் எழத் தொடங்கியது. அப்போது, ‘‘பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், உப்பிலியாபுரம் சரோஜா, இளவரசி’’ என்று ஆளாளுக்கு ஒரு பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயலலிதாவோ, ‘‘இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை உங்களுக்கு எல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரைத் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான், ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன்; அதற்கு, ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’’ என்று சொல்லி... சில நிமிடங்கள் சஸ்பென்ஸ் காட்டிய அவர்... மீண்டும், ‘‘பெரியகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் இப்போதைய வருவாய்த் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்’’ என்று சொல்ல... ஒட்டுமொத்த அ.தி.மு.க நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். 
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/politics/79021-dear-chief-minister-you-could-have-handled-this-in-a-better-way.art
நன்றி: 'விகடன்' இணையதளம்

Wednesday, January 25, 2017

“காந்தி சிலைக்கு அருகே சிவாஜி சிலை!’’ வலுக்கும் கோரிக்கை

சென்னைக் கடற்கரைச் சாலை பல தலைவர்களின் சிலைகளையும், எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளையும் கொண்டுள்ளது. அங்கேதான் கடந்த 10 ஆண்டுகளாக ‘சிம்மக் குரலோன்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெண்கல உருவச் சிலையும் நிறுவப்பட்டிருந்தது. இந்தச் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தகொண்டிருந்தபோதே, ‘மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகில் நிறுவப்பட்டிருக்கும் சிவாஜி கணேசன் சிலை, காந்தி சிலையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், அமைக்கப்பட்டு இருக்கிறது’ என சர்ச்சை கிளம்பியது. ஆனால், அது நிறுவப்பட்ட காலம் முதல் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிவந்த நிலையில், தற்போது அதற்கு விடைகொடுத்து முடித்துவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/77475-place-sivaji-statue-near-gandhi-statue-requests-sivaji-fans.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: ‘விகடன்’ இணையதளம்

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை!


‘வாடிவாசல் திறக்கும்வரை... வீடு வாசல் போகமாட்டோம்’ என்று அலங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி ஆரம்பித்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டம்... தமிழகம் முழுவதும் இளைஞர்களாலும், மாணவர்களாலும், பொதுமக்களாலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது; சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள்கூடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது; இதன் தொடர்ச்சியாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியது. இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்ததுடன், இந்தப் போராட்டம் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது.

ஒளியை ஏற்படுத்திய போராட்டம்!
தமிழகம் முழுவதும் அமைதியாக ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இனம், மதம் பாராமல் தமிழன் என்ற உணர்வுடனேயே அனைவரும் கலந்திருந்தனர். போராட்டக்காரர்களுக்குத் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உணவுப் பொட்டலங்களையும், தண்ணீர் பாக்கெட்களையும் வழங்கி மகிழ்வித்தனர். அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளான இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மொபைல் டாய்லெட்களும், ஏதாவது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. போராட்டக் களங்களில் அவர்களை ஊக்குவிப்பதற்காக ஜல்லிக்கட்டு பற்றிய பாடல்கள் பாடப்பட்டன; அதுபற்றிய கருத்துகள் பேசப்பட்டன; இடையிடையே இளைஞர்களின் நடனங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் இரவு நேரத்தில் தெரு விளக்குகளைத் தமிழக அரசு அணைத்துவைத்திருந்தாலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதோடு போராட்டக் களத்தில் அந்த ஆர்வலர்கள் செய்த மகத்தான காரியம் கடற்கரையில் குப்பைகளை அள்ளினார்கள்; சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்தார்கள்; பெண்களிடம் கண்ணியமாய் நடந்துகொண்டார்கள்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/78612-jallikattu-protest---from-beginning-to-end.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: ‘விகடன்’ இணையதளம்