Wednesday, November 23, 2016

'முதன்முதலில்’ சுரதா! - பிறந்த தின சிறப்புப் பகிர்வு

‘'நடுவிரல்போல் தலைதூக்கு – நம்
நாட்டாரின் இன்னலைப் போக்கு!’’ 
- என தன்னுடைய முதல் கவிதையிலேயே முத்திரை வரிகளைப் பதித்தவர் உவமைக் கவிஞர் சுரதா. அவருடைய பிறந்த தினம் இன்று.
புதுப்புது உவமைகளைப் புகுத்தியவர்!
மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன், தன் பெயரை மாற்றிக் கொண்டதைப்போல... ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கம்தான்‘சுரதா’என மாறியது. சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்ற சுரதா, பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார்.
அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான இவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் தொடர்ந்து படிக்க:http://www.vikatan.com/news/tamilnadu/73226-tamil-poet-suratha-birthday-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

ரூபாய் 500, 1000 செல்லாது! பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்...! (ஆல்பம்) #Demonetisation

றுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இன்றுடன் 14 நாட்கள் ஆகி விட்டன. இதனால் கறுப்புப் பணம் பிடிக்கப்பட்டதோ, இல்லையோ... சாமான்யர்களின் இயல்பு நிலை மட்டும் சாகடிக்கப்பட்டிருக்கிறது. இன்றும், சில்லறை மாற்றுவதற்காக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம் வாசல்களில் மக்களின் வரிசை ரயில் தண்டவாளமாய் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால் எத்தனையோ பிரச்னைகள்... உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பைக் காண இதை க்ளிக் செய்யுங்கள்... 
நன்றி: விகடன் இணையதளம்

சாமான்யர்களை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?

ன்று உலகையே திரும்பிப் பார்க்கவைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதுபோல்,1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி நள்ளிரவு... அப்போது இந்தியாவில் மிகப் பெரிய வங்கிகளாக இருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கி ஓர் அவசர சட்டத்தை தடாலடியாக துணிந்து பிறப்பித்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஒரு பெண்ணால் இந்தியாவை திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ‘‘சாதாரண மக்களுக்கு வங்கி சேவை கிடைக்கவில்லை. சாமான்யர்களும் வங்கிகளில் கடன் வாங்கிப் பயனடைய வேண்டும் என்பதே அந்தச் சட்டத்தின் நோக்கம்’’ என அதற்கு பதில் அளித்தார் இந்திரா காந்தி. ஆனால், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 47 ஆண்டுகளாகி விட்டன. இன்னமும் இந்திரா காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை. 

இந்தக் கட்டுரையை மேலும் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/india/73028-does-modi-know-about-the-problems-faced-by-common-man.art

நன்றி: விகடன் இணையதளம்

Monday, November 21, 2016

இது இல்லாததால்தான்... இவை அரங்கேறின!#Worldtoiletday

‘கோயில்களைக் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நாட்டில், கழிவறை வசதியை ஏற்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கூறியிருந்தார். பிரதமர் ஆனபிறகு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைக் கொண்டுவந்தார். பிரதமராகப் பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் காண நினைத்த, ‘தூய்மை இந்தியா’ இன்னும் நனவாகாத நிலையில், தற்போது கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளில் (நவம்பர்-19), 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில்... கழிப்பறை வசதி இல்லாமல் ஆற்றங்கரைகளையும், ஏரிக்கரைகளையும் தேடிச்செல்வோர் அதிகமிருக்கிறார்கள் என்பது அவரது கவனத்துக்குச் சென்றிருக்குமா எனத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/india/72858-world-toilet-day-special-story.art

நன்றி: விகடன் இணையதளம்

‘‘அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்!’’ - திப்பு சுல்தான் பிறந்த தின சிறப்புப் பகிர்வு

தினாறாம் நூற்றாண்டின் மத்தியிலேயே விரிந்திருந்தது மைசூரு. இந்த நகரில் ஓரளவுக்கு வசதி படைத்த மனிதர் ஹைதர் அலி. இவரின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். படுக்கையைவிட்டு நகர முடியாமல் பக்கவாதத்தால் படுத்திருந்த ஷாபாஸ் பேகத்துக்கு, அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஆனாலும், அவர் மனதில் இருந்த கவலை... தன் கணவருக்கு ஓர் ஆண் குழந்தை இல்லை என்பதுதான். இதுகுறித்து கணவரிடம், ‘‘நீங்கள் நிச்சயம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார். ‘‘வேண்டாம். பெண் குழந்தையே போதும். நீ ஓய்வெடுத்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஹைதர் அலி. 
‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு...’’
நம்மால் இனி எந்தப் பயனும் இல்லை என்ற மனநிலையிலேயே இருந்த ஷாபாஸ் பேகத்தை, கணவரின் மறுமொழி மேலும் வருத்தியது. இருந்தாலும், தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். தன்னை அடிக்கடி வந்து நலம் விசாரித்த ஃபக்ர் உன்னிஸாவை, தன் கணவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரண்டு ஆண்டுகள் ஓடியும் இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனிடையே ஷாபாஸ் பேகம் இறந்துவிட்டார். கடவுளைத் தரிசித்து கண்ணீர் சிந்தினார் ஃபக்ர். 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அப்போதே, ‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு... இனி, பிறக்கும் குழந்தைகள் நமக்கு’’ என்று கணவரிடம் கோரிக்கை வைத்தார். ‘‘பார்க்கலாம்’’ என்றபடியே பதில் அளித்தார் ஹைதர் அலி.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/72935-tipu-sultan-birthday-special-article.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: விகடன் இணையதளம்

Saturday, November 12, 2016

‘யார் தமிழர் ...?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை... ! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு #VikatanExclusive

‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர் கா.சு.பிள்ளை. அவரது பிறந்த தினம் இன்று.
பொதிகை மலை; பொருநை நதி; பொன்னான நெல் விளையும் புண்ணிய பூமி போன்றவற்றை ஒருங்கே கொண்ட திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பி.ஏ. பட்டம் பெற்று, ‘பி.ஏ. பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர். அவருடைய வாரிசாக உருவான கா.சு.பிள்ளை, தன்னுடைய ஆரம்பக் கல்வியை நெல்லையில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றார்.
இவர் படித்த காலத்தில், தங்கிய இடத்தில் மணியடித்துச் சிவ பூஜை செய்துவந்ததால், இவருக்குப் பூஜைப் பிள்ளை என்ற பெயரும் உண்டு. 1902-ம் ஆண்டு அரசின் நடுத்தரத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றதால், மற்ற வகுப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டது. மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்விலும் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்விலும் மாநில அளவில் இவர் முதலிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்றபோதுதான், ‘பவல்மூர்கெட்’ என்ற ஆங்கிலப் பெரியார் அமைத்த தமிழாராய்ச்சி நிறுவனப் பரிசைப் பெற்றார்.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/71449-kasupillai-birthday-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘‘இந்தியாவை வாள்கொண்டு வென்றதாகப் பலரும் பேசுகின்றனர்... வென்ற வாள்கொண்டே கட்டியாள வேண்டும் என்றும் கூறுகின்றனர். வாள் வலி கொண்டு ஒரு தேசத்தாரை என்றும் கட்டியாள இயலாது. அன்பின் வலிகொண்டு அணைத்து ஆதரித்தலே நேசத்தை வளர்க்கும்... பகை உணர்ச்சியைப் போக்கும்’’ என்றவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ். அவருடைய பிறந்த தினம் இன்று.
‘‘சித்தரஞ்சா... ஏன் இப்படிச் செய்கிறாய்?’’
இவர், வங்கதேசத்தில் உள்ள விக்ரம்புதூரில் 1870-ம் ஆண்டு பூபன் மோகன்தாஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே குறும்புத்தனம் செய்யக்கூடியவரான சித்தரஞ்சன், தன் சக வயதுடைய பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து மகிழ்வார். அதேநேரத்தில் அவர்கள் பாதி தின்கின்றபோதே அதைப் பிடுங்கிக்கொள்வார். ‘‘சித்தரஞ்சா... ஏன் இப்படிச் செய்கிறாய்’’ என்று அவர்கள் கேட்டால், அந்தப் பண்டங்களை எச்சில்படுத்திக் கடித்து விட்டுத் திரும்பக்கொடுப்பார். அதேபோல், விளையாட்டுப் பொம்மைகளைக் காட்டி அவர்களுக்கு எட்டாதபடி தூக்கிப்பிடித்து விளையாடுவார். இதேபோன்று சில சமயம் குழந்தைகளை, ‘‘விளையாட வாருங்கள்’’ என்று அழைப்பார். அவர்கள் வந்ததும்... ‘‘எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது’’ என்று சொல்லி ஓடிவிடுவார். இப்படி, அவருடைய குறும்புகளுக்கு அளவே இல்லாமல் போனது. ஆனாலும் வீட்டில் நல்லவர் என்றே பெயரெடுத்தார். இவருடைய விளையாட்டுத்தனத்தால் பிள்ளைக்கு படிப்பு வராதோ என்று பெற்றோர் கவலைப்பட்டனர். புத்தகமும், கையுமாய் அவர் இல்லாது இருந்தபோதும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் நினைவுப்படுத்திக் கொள்வதுடன் தேர்வுகளிலும் முதலிடம் பிடிப்பார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/71454-chittaranjan-das-birth-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்