Wednesday, October 5, 2016

குழந்தையை இழந்து நின்றவருக்கு காந்தி சொன்ன வழி!

‘‘உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது’’ என்றார் மகாத்மா. அறவழியில் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த அவருடைய பிறந்த நாள் இன்று. எல்லோருடைய மனதிலும் தேசப் பிதாவாக இருக்கும் காந்தியடிகள், ஒருமுறை அவர் தன் மகனிடமே ஆசிரமத்தில் தங்கியதற்கான பணத்தைக் கேட்டுக் கடிதம் எழுதினார். காந்தியடிகளின் புதல்வரான மணிலால் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்தார்.

மகனின் வரவால் காந்தியடிகளைவிட அதிகம் சந்தோஷம் அடைந்தார் அவருடைய தாய் கஸ்தூரி பாய். சுமார் ஒரு மாதம் காலம் ஆசிரமத்தில் தங்கியிருந்த மணிலால், பிறகு பெற்றோரிடம் விடை பெற்றுக்கொண்டு தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்று சில நாட்கள் கழித்து அவருக்கு காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘நீ இந்தியா வந்து எங்களோடு தங்கியதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நீ இங்கே ஆசிரமத்தில் வந்து தங்கிய வகையில் உனது உணவுக்காக ஆசிரமத்துக்குச் செலுத்தவேண்டிய தொகை ரூ.28-ஐ நீ செலுத்தாமலேயே போய்விட்டாய். எனவே, இந்தக் கடிதம் கண்டதும் பணத்தை அனுப்பிவைப்பாய் என நம்புகிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/coverstory/69075-this-is-what-gandhiji-told-to-a-person-who-lost-his-child.art

நன்றி: விகடன்  இணையதளம்

No comments:

Post a Comment