Monday, October 10, 2016

கறுப்புத் துணிகளை வாங்கிய பக்தவத்சலம்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

“எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்றவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம். அவருடைய பிறந்த தினம் இன்று.
‘பல்கலைக்கழகப் படிப்புக்குச் சமமானவர்!’
‘‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’’ என்று கூறியுள்ளனர், இவருடைய நெருக்கமானவர்கள். சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்; எதிர் தரப்பினரின் மனம் புண்படாமல் தனது கருத்தைப் பதிவுசெய்வதில் வல்லவர்; ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்தவர்; பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, தூய்மையைக் கடைப்பிடித்தவர். அதனால்தான், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்துகாட்டுபவர் பக்தவத்சலம்” என்றார் முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.வி.அளகேசன்.
கறுப்புத் துணிகளை வாங்கினார்!
ராஜாஜி மந்திரி சபையில், அமைச்சராக இருந்தசமயம் அரக்கோணத்துக்குப் பேசச் சென்றார் பக்தவத்சலம்.  அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் அவருக்கு கறுப்புத் துணியை வீசி எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். உடனே, அவர்களை அழைத்து அவர்களிடம் இருந்த கறுப்புத் துணிகளை வாங்கிக்கொண்டு, ‘‘உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன்’’ என்றார். அவர்களும் அமைதியாகக் கலைந்துசென்றனர். அப்படிப்பட்ட நன்மதிப்புக்குரியவர் பக்தவத்சலம்.
மேலும் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/69311-today-former-chief-minister-bakthavatsalam-birthday.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment