Saturday, November 12, 2016

‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘‘இந்தியாவை வாள்கொண்டு வென்றதாகப் பலரும் பேசுகின்றனர்... வென்ற வாள்கொண்டே கட்டியாள வேண்டும் என்றும் கூறுகின்றனர். வாள் வலி கொண்டு ஒரு தேசத்தாரை என்றும் கட்டியாள இயலாது. அன்பின் வலிகொண்டு அணைத்து ஆதரித்தலே நேசத்தை வளர்க்கும்... பகை உணர்ச்சியைப் போக்கும்’’ என்றவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ். அவருடைய பிறந்த தினம் இன்று.
‘‘சித்தரஞ்சா... ஏன் இப்படிச் செய்கிறாய்?’’
இவர், வங்கதேசத்தில் உள்ள விக்ரம்புதூரில் 1870-ம் ஆண்டு பூபன் மோகன்தாஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே குறும்புத்தனம் செய்யக்கூடியவரான சித்தரஞ்சன், தன் சக வயதுடைய பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து மகிழ்வார். அதேநேரத்தில் அவர்கள் பாதி தின்கின்றபோதே அதைப் பிடுங்கிக்கொள்வார். ‘‘சித்தரஞ்சா... ஏன் இப்படிச் செய்கிறாய்’’ என்று அவர்கள் கேட்டால், அந்தப் பண்டங்களை எச்சில்படுத்திக் கடித்து விட்டுத் திரும்பக்கொடுப்பார். அதேபோல், விளையாட்டுப் பொம்மைகளைக் காட்டி அவர்களுக்கு எட்டாதபடி தூக்கிப்பிடித்து விளையாடுவார். இதேபோன்று சில சமயம் குழந்தைகளை, ‘‘விளையாட வாருங்கள்’’ என்று அழைப்பார். அவர்கள் வந்ததும்... ‘‘எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது’’ என்று சொல்லி ஓடிவிடுவார். இப்படி, அவருடைய குறும்புகளுக்கு அளவே இல்லாமல் போனது. ஆனாலும் வீட்டில் நல்லவர் என்றே பெயரெடுத்தார். இவருடைய விளையாட்டுத்தனத்தால் பிள்ளைக்கு படிப்பு வராதோ என்று பெற்றோர் கவலைப்பட்டனர். புத்தகமும், கையுமாய் அவர் இல்லாது இருந்தபோதும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் நினைவுப்படுத்திக் கொள்வதுடன் தேர்வுகளிலும் முதலிடம் பிடிப்பார்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/71454-chittaranjan-das-birth-day-special-article.art
நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment