Monday, March 20, 2017

கங்கை அமரனை ஆர்.கே. நகரில் களமிறக்கியது எதற்கு?

''நீங்கள், பி.ஜே.பி-யில் இருந்துகொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா'' என்று அப்போது, நம் 'விகடன்' சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுகள் இருப்பினும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, ஓர் அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமைகொண்டு இருக்கிறேன்'' என்றார், இசையமைப்பாளர் கங்கை அமரன். 
அந்த கங்கை அமரன்தான், தற்போது களைகட்டத் தொடங்கியிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர். அ.தி.மு.க-வின் கோட்டையான இந்தத் தொகுதியில், பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒருசில கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர்களைக் களமிறக்கிவிட்டன. சுயேட்சை வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது பி.ஜே.பி-யின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கங்கை அமரன், ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தேர்வானது எப்படி என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83947-why-bjps-gangai-amaran-is-contesting-in-rk-nagar.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment