Monday, March 20, 2017

டி.டி.வி.தினகரன் திடீரெனக் களமிறங்கியது இதற்குத்தான்...!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்தியே தற்போது அனைவருடைய உதடுகளிலும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் நின்ற இந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி எனப் பலமுனைப் போட்டிகள் நிலவுவதுடன்... ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுதவிர, அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் களத்தில் குதிக்கத் தயாராய் இருக்கின்றனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க-வின் வேட்பாளராக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். தீபாவையும் சேர்த்தால், தற்போது நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரையும் எதிர்த்து ஜெயிக்கப்போகிறவர் அந்தத் தொகுதி மக்களின் ஆதரவாளராகவும், அதேசமயத்தில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் யார் வெற்றிபெறுகிறார் என்பதை, தேர்தல் நாள் முடிவன்றுதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலையில் டி.டி.வி.தினகரன், ''இந்தத் தொகுதியில் வேட்பாளராய் களம் காண்பதற்கு என்ன காரணம், அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்படுவதற்கு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோது... அவரே இறங்கியது ஏன்'' போன்ற தகவல்களை அ.தி.மு.க-வினர் அடுக்கினார்கள்.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83781-this-is-why-t-t-v-dinakaran-contesting-in-rk-nagar.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment