Monday, March 20, 2017

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்.... ஒரு பூசாரி முதல்வர் ஆன கதை!

ந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் முதல்வராய்ப் பொறுப்பேற்க இருக்கும் யோகி ஆதித்யநாத், இதற்குமுன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி., பெரும்பான்மையாக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே மாபெரும் வெற்றிபெற்ற பி.ஜே.பி., புதிய முதல்வரைத் தேர்வுசெய்ய ஒருமனதாக முடிவு செய்தது. இதில், அந்த மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச புதிய முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நேரத்தில், அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்துகொண்டிருக்க... மற்றொரு புறம், அவர் முன்னர் ஏற்படுத்திய சர்ச்சைகளும்... வழக்குகளும் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க; http://www.vikatan.com/news/india/84022-travel-of-uttar-pradesh-chief-minister-yogi-adityanath-from-temple-priest-to-chief-minister.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment