Monday, March 20, 2017

பன்னீர்செல்வம் அணியிலிருந்து தீபா விலகியிருக்கக் காரணம் என்ன?

அ.தி.மு.க-விலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தவர் தீபா. தற்போது அவர்களிடமிருந்து விலகியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று விடை தேடி அவருடைய ஆதரவாளர்களை நாடினோம்... முழுமையான பதில் கிடைத்தது... அதற்குமுன் தீபா பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்....
'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' !
ஜெ.தீபா. இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (அண்ணன் மகள்) ரத்த சொந்தம். மாதவன் என்பவரை,  தீபா திருமணம் செய்துகொண்டு சென்னை தி.நகரில் வசித்துவருகிறார். ஜெ. உடல்நலமின்றி அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது... அவரைப் பார்க்கச் சென்ற தீபாவை, மன்னார்குடி கும்பல் இடையிலேயே மடக்கித் திருப்பியனுப்பியது. ஜெ-வின் இறப்புக்குப் பிறகு அம்மாவின் உண்மையான விசுவாசிகளும், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களும் தீபாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். இதனால் தினந்தினம் அவர் வீட்டுமுன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி, அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். பல நாள்கள் காலம் தாழ்த்திவந்த தீபா, நீண்ட யோசனைக்குப் பிறகு... அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். அதன் காரணமாக, அவருடைய அத்தையின் (ஜெ-வின்) பிறந்தநாளின்போது ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என அதற்குப் பெயரும்வைத்தார். 
மெலும் இந்தக்  கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83887-why-does-not-join-deepa-join-ops-team-.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment