Monday, March 20, 2017

”நாம் ஏமாறுவதற்கு நாமே துணைநிற்கிறோம்” நுகர்வோர் ஏமாறுவது இப்படிதான்!

மாறுபவர்கள் இருக்கிறவரை உலகம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கும். இயந்திரமயமான இன்றைய உலகில்... நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். அது, நம்முடைய அறியாமையால் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது, திரையரங்குகள் மற்றும் சில இடங்களில் பாதிக்கப்படும்போது எனப் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தே ஏமாறுகிறோம். இதற்கு, விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லாததே காரணம். இப்படி, இந்த உலகத்தில் ஏமாற்றப்படும் ஒவ்வொரு மனிதரும் நுகர்வோரே. அவர்கள் அனைவரும் தமது உரிமையைக் காத்திடவும், ஏமாற்றத்தைத் தவிர்த்திடவும் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காகத்தான் ஆண்டுதோறும் மார்ச் 15-ம் நாள் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் புரட்சிகரமான அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதாவது, 1983-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் உலகம் முழுவதும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/83720-world-consumer-rights-day-special-article.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment