Saturday, March 11, 2017

ஆர்.கே.நகர் சென்டிமென்ட்டும்... மக்கள் எதிர்பார்ப்பும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக, தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, காலியாகும் சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதியில், ஆறு மாதங்களுக்குள்  இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (9-3-17) தேர்தல் ஆணையம், ''வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்'' என்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15-ம் தேதியும் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/83182-these-are-the-expectations-of-rk-nagar-people.html
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment