Monday, March 20, 2017

''இனிமேல் அவரைப் பேச விடக்கூடாது!'' ராதாரவியைக் கண்டிக்கும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்

தி.மு.க தலைவர் கருணாநிதியால் பெயர்சூட்டப்பெற்றவர்கள்  ராதாரவிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள். அவர்களின் மனம்குன்றும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளதுடன், அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தவிருக்கிறது. 
ராதாரவி. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசு. அ.தி.மு.க-வில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த ராதாரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்தார். இவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இருப்பதோடு... மனம் நெருடும் கருத்துகளும் இருக்கும். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, பா.ம.க நிறுவனர் ராமதாஸையும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு... கிண்டலடித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சைக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுத்தான் இப்போது ராதாரவிக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. 

மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/82723-radharavi-faces-the-heat-as-he-mocked-differently-abled.html

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment