Friday, September 2, 2016

சட்டசபைக்கு சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.!

(இந்தக் கட்டுரை 29-08-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

ரியானா மாநில ஆளும் பி.ஜே.பி எம்.எல்.ஏ பவன்குமார் சைனி, 110 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்து சட்டசபைக்கு வந்தார்.


அரியானா மாநிலத்தில் சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வெள்ளி அன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக, குருஷேத்திரம் மாவட்டம், லட்வா தொகுதியின் எம்.எல்.ஏ-வான பவன்குமார் சைனி, தனது கட்சித் தொண்டர்கள் 10 பேருடன், 110 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்து சட்டப்பேரவைக்கு வந்தார்.

இதுகுறித்து பவன்குமார் சைனி, ‘‘சைக்கிள் ஓட்டுவது என்பது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகும். மேலும், கடந்த சில மாதங்களாக எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. தற்போதைய காலத்தில் இளம் வயதிலேயே இதயக்கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நீரிழிவு நோயால் இந்தியாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவற்காகவே 110 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துவந்தேன்’’ என்று கூறினார்.
கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, 19 பேர் ராஜாங்க மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதையொட்டி பதவி ஏற்பு விழாவில் மன்சுக் பாய் மாண்டவியா, அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகிய இரு எம்.பி-க்களும் தங்களுடைய இல்லங்களில் இருந்து சைக்கிள்களில் உற்சாகமாக ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர் தாலுக்கா நீதிபதி சிவக்குமாரும் நீதிமன்றதுக்கு சைக்கிளில்தான் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment