Wednesday, January 25, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை!


‘வாடிவாசல் திறக்கும்வரை... வீடு வாசல் போகமாட்டோம்’ என்று அலங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி ஆரம்பித்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டம்... தமிழகம் முழுவதும் இளைஞர்களாலும், மாணவர்களாலும், பொதுமக்களாலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது; சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள்கூடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது; இதன் தொடர்ச்சியாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியது. இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்ததுடன், இந்தப் போராட்டம் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது.

ஒளியை ஏற்படுத்திய போராட்டம்!
தமிழகம் முழுவதும் அமைதியாக ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இனம், மதம் பாராமல் தமிழன் என்ற உணர்வுடனேயே அனைவரும் கலந்திருந்தனர். போராட்டக்காரர்களுக்குத் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உணவுப் பொட்டலங்களையும், தண்ணீர் பாக்கெட்களையும் வழங்கி மகிழ்வித்தனர். அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளான இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மொபைல் டாய்லெட்களும், ஏதாவது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. போராட்டக் களங்களில் அவர்களை ஊக்குவிப்பதற்காக ஜல்லிக்கட்டு பற்றிய பாடல்கள் பாடப்பட்டன; அதுபற்றிய கருத்துகள் பேசப்பட்டன; இடையிடையே இளைஞர்களின் நடனங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் இரவு நேரத்தில் தெரு விளக்குகளைத் தமிழக அரசு அணைத்துவைத்திருந்தாலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதோடு போராட்டக் களத்தில் அந்த ஆர்வலர்கள் செய்த மகத்தான காரியம் கடற்கரையில் குப்பைகளை அள்ளினார்கள்; சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்தார்கள்; பெண்களிடம் கண்ணியமாய் நடந்துகொண்டார்கள்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/coverstory/78612-jallikattu-protest---from-beginning-to-end.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: ‘விகடன்’ இணையதளம்

No comments:

Post a Comment