Tuesday, September 5, 2017

''என்னிடம் எளிமையான கேள்வி ஒன்று இருக்கிறது!” - இறந்த அனிதாவும்... விடை கிடைக்காத அவளது கேள்வியும்

''என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா... இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்கு பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?  நான் கேட்கும் கேள்விகள் அனைத்தும், ஒரு தனிமனிதியின் கேள்விகள் இல்லை. கல்வியை இறுகப்பற்றி மேலே எழுந்துவிடலாம் என்ற பெரும் கனவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவர்களின் கேள்விகள். இது சங்கடம் தரும் கேள்விகள்தான். ஆனால், நியாயம் கிடைக்கும்வரை இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புவேன்... எழுப்புவோம்” என்று கடந்த பத்து நாள்களுக்கு முன் சபதமிட்ட ஒரு பெண்தான், இன்று மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/101058-i-have-a-question-for-you---last-minutes-of-anitha.html

நன்றி: விகடன் இணையதளம்

No comments:

Post a Comment