Sunday, July 12, 2009

இவ்வுலகத்து தேவதையே.....

நீயும் நானும்
நிலாச்சாரலில்
கைகோர்த்து நடக்கையில்
மின்மினிகளும் மலர்தூவ
மெல்லிய மலர்களும்
வாழ்த்துப்பாட,
நடந்தோமே புல்வெளியில்.....
நனைந்தோமே பனிச்சாரலில்!

அழகிய பூங்காவுக்குள்
அருகருகே
அமர்ந்துபேசி
மகிழ்ந்தோமே.....
அசையாத
நம்நினைவுகளை
அதிலும் குறிப்பாய்
நீ - நடத்திய
நாடகங்கள்
எத்தனை எத்தனையோ?
அதில்
எதை சொல்வது?
எதையும் அவ்வளவு
எளிதில்
மறக்க முடியாது......
என்னால்!


ஆனாலும்
என்னை மிகவும்
ஆச்சரியப்படுத்திய
நினைவுகளை மட்டும்
இப்போது சொல்கிறேன்.....
உன்னை
முதலில்பார்த்தபோது
மூச்சுக்கூட விடமுடியாமல்
பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்தாயே......

என் காதலை
உன்னிடம்
சொல்லவந்தபோது
காலணியை காட்டினாயே.....
கவலையுடன் நான்
காத்திருந்த நேரத்தில்
உனக்குள்ளும்
காதல்இருப்பதை
கண்களால்
காட்டிச் சென்றாயே......


உன் புன்னகை
முகத்தை வைத்து
புதுக்கவிதை எழுதச்சொல்லி
அடம்பிடித்தாயே....
இந்தச்
சின்ன இதயம்
ஆசைப்பட்டதற்காக
சேலைகட்டி வந்து
அசத்தினாயே.....

ஒழுகும் ஐஸ்கிரீமை
உதட்டில் வழியவிட்டு
என் ஒருவிரலால்
துடைத்துவிடசொன்னாயே......

குடை எடுத்து
செல்லாதநாளில்
மழையில் நனைந்து
மருத்துவமனைக்கு
செலவு வைத்தாயே......

சின்ன தியேட்டருக்குள்
சிரிப்பு படம்
பார்க்கும்போது
உனக்கு
வயிற்றுவலிவந்து
பாதியிலேயே
திரும்பினோமே.......

நம் காதலை
உன் நண்பிகளிடம் சொல்லி
சந்தோஷத்தில்
மிதந்தாயே.....
என் அழகிய
புகைப்படத்தை
எடுத்துச்சென்று
உன் வீட்டு
அலமாரியில்
வைத்து
ரசித்து பார்த்தாயே.....

கடற்கரையில்
நம் பெயரை எழுதி
ஆனந்தப்பட்ட - நீ
அடுத்த நிமிடமே
அலை வந்து
அழித்துச் சென்றதால்
அழுதாயே.....

சண்டை
போட்டுக்கொண்டு
உன்னிடம்
நான்பேசாமல்
இருந்ததற்காக
சாப்பிடாமல் கிடந்து
மயக்கம்
போட்டுவிழுந்தாயே......


இவ்வுலகத்து தேவதையே......
இது மட்டும் போதுமா?
இல்லை,
இன்னும் சொல்லவா?
என்னால்
எதையும்மறக்க முடியாது.....
என் இதயத்தில்
உன்னை தவிர
வேறு யாரையும்
சுமக்க முடியாது......
இது
இப்போதுமட்டுமல்ல.....
எப்போதைக்கும்!

No comments:

Post a Comment