Friday, July 8, 2016

உடற்பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை எவை?

யிற்சியை காலை, மாலை வேளைகளில் செய்யவேண்டும். முதலில் பயிற்சியைத் தொடங்குபவர்கள் குறைவான நேரம் செய்யவேண்டும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம். துணையுடன் செய்தால் ஆர்வம் அதிகரிக்கும். தனியாகப் பயிற்சி செய்யும்போது இசையைக் கேட்டுக்கொண்டு செய்யலாம். உடலை வருத்திக்கொள்ளாமல் பயிற்சி செய்வது முக்கியம். விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோர் மைதானத்தைப் பயன்படுத்துவது மிகச் சிறந்தது. உங்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் உங்கள் நண்பர் உங்களைவிட அதிக அளவில் பயிற்சியில் ஈடுபடுபவராக இருத்தல் வேண்டும். உடற்பயிற்சியைத் தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உடலுக்கு நல்லது அல்ல. உடற்பயிற்சிக்குக் 60 சதவிகிதம் டய்ட்டும், 40 சதவிகிதம் பயிற்சியும் தேவை. எத்தகைய பயிற்சி செய்தாலும் டயட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அவரவர் உடல் ஆரோக்கியத்தைத் தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று உடற்பயிற்சி செய்யவேண்டும். எந்தவிதமான உடற்பயிற்சி செய்தாலும் அதனை தொடர்ந்து செய்யவேண்டும். எந்தப் பயிற்சி செய்வதற்கு முன்பும் வார்ம் அப் செய்வதை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்குக் குறைவானவர்கள் பாடி பில்டிங், பவர் பில்டிங் செய்தால், அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும். பவர் லிஃப்ட்டிங், வெயிட் லிஃப்ட்டிங் செய்வதற்கு முன் மைதான பயிற்சிகளைச் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவிகள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி முடியும் வரை இடையிடையே ஓய்வெடுக்கக் கூடாது. பயிற்சியில் ஈடுபடுபவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயிற்சி முடிந்தபின் மூக்கால் மட்டுமே சுவாசிக்க வேண்டும். பயிற்சி முடிந்தபின் அரைமணி நேரம் இடைவேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment